siruppiddy

செவ்வாய், 8 அக்டோபர், 2013

உலக சாதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்?


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தொன்றின் போது உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஒரு குழந்தையின் தந்தை ஒருவரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு வைத்தியர்களும் ஏனைய வைத்தியர்களும் கூட்டாக இணைந்து துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை மீளப் பொருத்தியுள்ளனர்.

12 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பு ஒன்றை மீளவும் பொருத்தி வழமை நிலைமைக்கு கொண்டு வந்த முதல் சந்தர்ப்பமாக இது கருதப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளியை வைத்தியசாலையில் சேர்த்த நேரம், துண்டிக்கப்பட்ட உறுப்பை பாதுகாப்பாக எடுத்து வந்த விதம் ஆகியன இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவியது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்,

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபர் இயல்பு வாழக்கையை தொடர முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முற்று முழுதாக துண்டிக்கப்பட்டிருந்த ஆணுறுப்பு வெற்றிகரமாக மீளப் பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுநீர் கழித்தல், தம்பத்ய உறவை தொடருதல் போன்ற சகல செயற்பாடுகளையும் தடையின்றி மேற்கொள்ளக் கூடிய வகையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை