siruppiddy

திங்கள், 30 நவம்பர், 2015

நாடக நடிகையின் பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

இலங்கை தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகையான சனோஜா பிபிலையின் கையடக்கத் தொலைபேசி, பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்3.5 மில்லியன் மதிப்புள்ள நகைகளும், மற்றும் 32,000 ரூபா பணமும் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அவருடைய காரில் இருந்தே, இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கால்துறையினர்  தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மாலை, காலம்சென்ற தமித சலுவதனவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக,...

வெள்ளி, 27 நவம்பர், 2015

தீபம் ஏற்றிய மூதாட்டிக்கு யமனாக அமைந்த கிணறு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிணற்றடியில் விளக்கிட சென்ற மூதாட்டி ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம் அடைந்துள்ளார். மன்னார் பண்ணை நாச்சுமார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜெகநாதன் ராமை ரத்தினம் (67 வயது) மூதாட்டியே இவ்வாறு  மரணமடைந்துள்ளார். இவர் கிணற்றில் விழுந்ததும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம்...

திங்கள், 23 நவம்பர், 2015

மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை (காணொளி இணைப்பு)

மனிதர்கள் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதனால்தான் எப்போதும் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அதே நேரத்தில் மிகவும் விநோதமான சாதனைகளையும் செய்வதற்கு ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள். டச்சு நாட்டின் சைக்கிள் கழகம் ஒன்று உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை  படைத்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் பிராங்க் பெல்ட் கூறுகையில், உலகம் முழுவதும் சைக்கிள் வர்த்தகம் மிகவும் அதிக அளவில்...

ஞாயிறு, 22 நவம்பர், 2015

இலங்கைப்பெண்ணுக்கு கிடைத்த சொற்பனம்

டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக  நடித்தார். இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நதியா, ‘பி.ஏ.’ (அக்கவுன்டன்சி) பட்டதாரி. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு...

வெள்ளி, 20 நவம்பர், 2015

சாலை விபத்தில் முதியவர் மரணம் சாரதிக்கு 2 வருட கடூழியச் சிறை

கவனமின்றி வேகமாக அரச பேருந்தைச் செலுத்தி, 97 வயதானவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்து நீதிபதி இளஞ்செழியன்  தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி...

புதன், 18 நவம்பர், 2015

மழை ஓய்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன

யாழ்.குடாநாட்டில் மூன்று நாட்காளாகப் பெய்த அடை மழை ஓய்ந்து மூன்று நாட்களாகியும் ஏழாலை தெற்கின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் குளம் (ஏழு கோவில் குளம்) பெருக்கெடுத்தமையினால் ஏழாலை தெற்கில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக ஏழாலை தெற்கு விழிசிட்டிப் பகுதியைச் சேர்ந்த 16 குடும்பங்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தால் இடம்பெயர்ந்து ஏழாலை முத்தமிழ் மன்ற நூலக...

செவ்வாய், 17 நவம்பர், 2015

நபர் மீது மண்­வெ­ட்­டியால் தாக்குதல் : மூன்று பேர் கைது

மண்வெட்டியால் தாக்கி நபர் ஒருவரைக் காயப்படுத்தியதா சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பை இரட்டிக்குளம் பிரதேசத்திலேயே இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. மண்வெட்டித் தாக்குதலுக்கு உள்ளான மாதம்பை இரட்டிக் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...

திங்கள், 16 நவம்பர், 2015

கண்டியில் போதைப் பொருள் விற்பனை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை!

போதைப் பொருள் விற்பனை செய்த பெண் ஒருவருக்கு கண்டி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நாள் தோறும் ஹெரோயின் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிய கணவர் மற்றும் தந்தைக்கும் ஹெரோயின் போதைப் பொருள் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தப் பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப் பொருள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் பெண் தண்டிக்கப்பட்டுள்ளார். கண்டி சுதுஹ_ம்பொல என்னும் இடத்தில்...

வெள்ளி, 13 நவம்பர், 2015

குரங்காக யாழில் மாறிய இரு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர். இந்த இருவரும், அப்பகுதியிலுள்ள காணிகளின் வேலிகளை...

திங்கள், 9 நவம்பர், 2015

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்கினிய  வாசகர்கள், அன்பு உறவுகளுக்கும் அனைவருக்கும் என் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. எம் தாய் நாட்டிலும் உலகெங்கிலும் பரந்து வாழும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது  வலையமைப்பின் சார்பில்   இனிய தீப ஓளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள். இருட்டை கிழித்து பிறக்கட்டும் புது வழி… மத்தாப்பு புன்னகையில் கரையட்டும் கண்ணீர் துளி… விடியும் பொழுது ஒளிர- ஏற்று தீப ஒளி… முடியும் என்ற திண்ணம் கொண்டு துவங்கட்டும்  தீபாவளி ஏற்றமிகு...

திடிர் நாடக மன்றத்தினரால் மதிப்பளிக்கப் கணேஷ் தம்பையா

லண்டனில் அரியாலை மன்றத்தினரால் மதிப்பளிக்கப் படுகிறார் திரு. கணேஷ் தம்பையா தன் சிறுவயதில் இருந்து வில்லிசை வித்தகனாய் எங்கள் தாயகத்தில் பட்டி, தொட்டி எங்கும் வலம் வந்த ஓர் கலைஞர்.  இலங்கை வான்ஒலி,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அன்றே வரவேற்பு பெற்ற ஓர் அற்புதமான கலைஞர். அன்று முதல் இன்றுவரை மிளிரும் கலைஞர். “நையாண்டி மேளம்” எனு‌ம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.(ஒரு மரத்தில் பூவும், காயும், கனியும்,கலகலப்பாய் வெளியே தெரியும் வேர்  தெரிவதில்லை அப்படி...

சனி, 7 நவம்பர், 2015

தாழமுக்கம் இலங்கைக்கு அருகில் சூறாவளி எச்சரிக்கை!!!

நாட்டின் பல இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம்  தெரிவிக்கிறது. இலங்கைக்கு தென்கிழக்கே காற்றமுக்க நில ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை  பெய்யக் கூடும். இதன்போது கிழக்கு கரையோர பகுதியில் பலமான காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானமாக இருக்குமாறு...

வியாழன், 5 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்.05.11.15

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன்(மோகன் )தனது   பிறந்த நாளை. 05.11.201515.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள்  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்...

திங்கள், 2 நவம்பர், 2015

புகையிரதங்களில் இன்று முதல் பிச்சை எடுக்க தடை?

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பவர்களை நாளை (01) முதல் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது. இதன் பிரகாரம் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸார், ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி நாளை முதல்...

ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஆப்பிள் ஃபோனை பேஸ்புக் ஊழியர்கள் பயன்படுத்த தடை

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஆப்பிள் போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதோ பேஸ்புக்கிற்கும் ஆப்பிளுக்கும் சண்டை என்று நினைத்துவிட வேண்டாம். பேஸ்புக்கை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ராய்ட் போன்களைத்தான். ஆனால், பேஸ்புக்கில் பணிபுரிபவர்கள் பயன்படுத்துவது ஆப்பிள் போன்களை தான். எனவே, அவர்களுக்கு ஆண்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்களின் பிரச்சனைகளை...

நவற்கிரி காலநிலை