siruppiddy

வெள்ளி, 27 நவம்பர், 2015

தீபம் ஏற்றிய மூதாட்டிக்கு யமனாக அமைந்த கிணறு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிணற்றடியில் விளக்கிட சென்ற மூதாட்டி ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
மன்னார் பண்ணை நாச்சுமார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜெகநாதன் ராமை ரத்தினம் (67 வயது) மூதாட்டியே இவ்வாறு 
மரணமடைந்துள்ளார்.
இவர் கிணற்றில் விழுந்ததும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையை தொடர்ந்து சடலம் இன்று நண்பகல் உறவினரிடத்தில் கையளிக்கப்பட்டது.
கணவனும் மனைவியும் இவ்வீட்டியில் தனியாக வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பித்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை (காணொளி இணைப்பு)

மனிதர்கள் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதனால்தான் எப்போதும் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
அதே நேரத்தில் மிகவும் விநோதமான சாதனைகளையும் செய்வதற்கு ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
டச்சு நாட்டின் சைக்கிள் கழகம் ஒன்று உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை 
படைத்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் பிராங்க் பெல்ட் கூறுகையில், உலகம் முழுவதும் சைக்கிள் வர்த்தகம் மிகவும் அதிக அளவில் நடக்கக் கூடியது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ளது அதில் இருந்து மாறுபட்ட ஒன்றை என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 117 அடி நீளம் உடைய இந்த சைக்கிளிற்கு இதற்கும் இரண்டு சக்கரங்கள்தான் உள்ளன. இதை இரண்டு பேர் எளிதாக ஓட்டிச் செல்லலாம். உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிள்
 இதுதான்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 நவம்பர், 2015

இலங்கைப்பெண்ணுக்கு கிடைத்த சொற்பனம்

டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக 
நடித்தார்.
இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நதியா, ‘பி.ஏ.’ (அக்கவுன்டன்சி) பட்டதாரி. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆரி-நதியா இருவரும் திருமணம் செய்து கொள்ள
 விரும்பினார்கள்.
இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு 
நடக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. அதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நிருபரிடம் நடிகர் ஆரி
 கூறியதாவது:-
‘‘நானும், நதியாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் எங்கள் நட்பு உருவானது. கடந்த மூன்று வருடங்களாக நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். சமீபத்தில்தான் அது காதலாக மாறியது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். எங்கள் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்
 கொண்டார்கள்.
எனவே இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்’’. இவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 20 நவம்பர், 2015

சாலை விபத்தில் முதியவர் மரணம் சாரதிக்கு 2 வருட கடூழியச் சிறை

கவனமின்றி வேகமாக அரச பேருந்தைச் செலுத்தி, 97 வயதானவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் 
தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருக்கு,
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில், சின்னத்தம்பி மார்க்கண்டு என்ற வயோதிபருக்கு விபத்து மரணம் ஏற்படுத்தியமைக்காக அரச பேருந்து சாரதியாகிய கணபதிப்பிள்ளை ரகுநாதனுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்தை
 கவனமின்றி
அதிவேகமாகச் செலுத்தியமை, போதிய அவதானமும் முள்பாதுகாப்பின்றியும் விழிப்பின்றியும் செலுத்தியமை காரணமாக ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்தியதன் அடிப்படையில்,
கணபதிப்பிள்ளை ரகுநாதனுக்கு எதிராகக் குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது, தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை எதிரி ஏற்றுக்கொண்டார்.
எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, அவருடைய அரச சேவைக்குப் பாதிப்பின்றி தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் விண்ணப்பித்தார்.
வழக்கினையும், எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டதையும், எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தையும் நீதிபதி கவனத்தில் எடுத்து ஆய்வு செய்ததன் பின்னர் போட்டிக்கு வாகனம் ஓடி,
விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, தவறுதலாக நடந்துவிட்டது என கூறி நீதிமன்றத்தில் நிவாரணம் பெற முடியாது என தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 
பேருந்து சாரதிகள் போட்டிக்கு வாகனங்கள் ஓடுவதனாலேயே, அதிகமான விபத்து மரணம் ஏற்படுகின்றது. காயங்கள் மூலம் பலர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள்.
இந்த வழக்கில் அரச போக்குவரத்து வண்டியும் தனியார் வண்டியும் போட்டிக்கு ஓடியதன் காரணமாக, 97 வயது வயோதிபர் விபத்து மரணத்தில் இறந்துள்ளார். வயோதிபர்கள், சிறுவர்கள், மாணவ மாணவிகளை பாதுகாக்க, இந்த சாரதிகள் தவறுகின்றார்கள்.
இந்த வழக்கின் எதிரி ஓர் அரச போக்குவரத்து சாரதி. அரச போக்குவரத்து வண்டியை ஒட்டியவர். அவருக்குக் கடமைப் பொறுப்பு மிக அதிகமாகும். அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அரச தனது வண்டியில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கௌரவத்தையும், தனது அரச கடமை பொறுப்பையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் இத்தகைய பொறுப்புமிக்க கடமைகளில் இருந்து இவர் தவறியுள்ளார்.
சட்டப்புத்தகங்களில் என்னதான் இருந்தாலும், போக்குவரத்து வண்டிகளின் வேகம் அதிகரிப்பு மக்கள் நடமாட்டங்களைப் பொறுத்து வேறுபடும். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் மக்கள் செறிவு அதிகரித்துள்ளது.
எனவே 40 கிலோ மீற்றருக்குக் குறைவான வேகத்தில் ஓடினயாவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது, சாரதிகள் கடமை பொறுப்பாகும்.
போட்டிக்கு ஓடி விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, தவறுதலாக நடந்த விபத்து எனக் கூறி மன்றில் நிவாரணம் பெற முடியாது.
எனவே, இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
அத்துடன், இறந்தவருடைய 3 பிள்ளைகளுக்கும் சமமாகப் பங்கிடும் வகையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நட்டயீடு வழங்க வேண்டும் எனவும் .இந்த நீதிமன்றம் கட்டளையிடுகின்றது என்றார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

மழை ஓய்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன

யாழ்.குடாநாட்டில் மூன்று நாட்காளாகப் பெய்த அடை மழை ஓய்ந்து மூன்று நாட்களாகியும் ஏழாலை தெற்கின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் குளம் (ஏழு கோவில் குளம்) பெருக்கெடுத்தமையினால் ஏழாலை தெற்கில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக ஏழாலை தெற்கு விழிசிட்டிப் பகுதியைச் சேர்ந்த 16 குடும்பங்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தால் இடம்பெயர்ந்து ஏழாலை முத்தமிழ் மன்ற நூலக மண்டபத்தில் 
தங்கியுள்ளன.
அத்துடன் ஏழாலை தோப்புப் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் 24 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளன.
தோப்புப் பகுதிக்குள் உள்நுழையும் வீதியில் மனிதர்கள் நடமாட முடியாதவளவு மூன்று அடி உயரத்துக்கு மேலாக மழை வெள்ளம் தேங்கிக் காணப்படுகிறது. தற்போதும் குறித்த பகுதியின் சில வீடுகளுக்குள் ஒரு அடிக்கு மேலாக வெள்ளம் பெருகிக் காணப்படுகிறது.
குறித்த பகுதிகளில் வீடுகளுக்குள் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெள்ளம் காரணமாக வெளியேறுவதற்கு அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிணறுகளுக்குள் 
வெள்ளம் புகுந்ததால் 
குடி நீரின்றி அந்தரிப்பதுடன் மலசல கூடங்களின் குழிகள் வெள்ளம் காரணமாக நிரம்பி வழிவதால் மலசலகூடங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதுடன் அவை வெள்ளத்துடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த குடிமனைகளுள்ள தோப்புப் பகுதியில் திருடர் குழுவொன்றின் நடமாட்டம் காணப்படுவது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன் காரணமாக இடம்பெயர்ந்த பொதுமக்கள் அச்சத்திலுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் இதுவரை அரச அதிகாரிகளோ அல்லது அரசியல் வாதிகளோ நேரடியாக வந்து பார்வையிடவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இன்று புதன்கிழமை (18-11-2015) அதிகாலை வேளையில் குடாநாட்டில் கடும் மழையுடனான காலநிலை காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது  




செவ்வாய், 17 நவம்பர், 2015

நபர் மீது மண்­வெ­ட்­டியால் தாக்குதல் : மூன்று பேர் கைது

மண்வெட்டியால் தாக்கி நபர் ஒருவரைக் காயப்படுத்தியதா சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பை இரட்டிக்குளம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
மண்வெட்டித் தாக்குதலுக்கு உள்ளான மாதம்பை இரட்டிக் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




திங்கள், 16 நவம்பர், 2015

கண்டியில் போதைப் பொருள் விற்பனை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை!

போதைப் பொருள் விற்பனை செய்த பெண் ஒருவருக்கு கண்டி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நாள் தோறும் ஹெரோயின் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிய கணவர் மற்றும் தந்தைக்கும் ஹெரோயின் போதைப் பொருள் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தப் பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப் பொருள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் பெண் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கண்டி சுதுஹ_ம்பொல என்னும் இடத்தில் வதியும் சந்திரலேகா குமாரி பெரேரா என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.
கண்டி உயர் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர இன்று இந்த தண்டனையை விதித்துள்ளார்.
2014ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி இந்தப் பெண் கைது 
செய்யப்பட்டிருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை