siruppiddy

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சடலமாக காலை காணாமல் போன சிறுமி மீட்கப்பட்டார்

கொட்டதெனிய, படல்கமவில் காணாமல் போன சிறுமி இன்று (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இந்தச் சிறுமி மறுநாள் அதிகாலையில் காணாமல்
 போயிருந்தார்.
5 வயதான இந்தச் சிறுமியின் சடலம் திவுலப்பிட்டி அக்கரன்கஹ, ஜயசுமனாராம விகாரைக்கு அருகிலிருந்து இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 12 செப்டம்பர், 2015

உறங்கிக்கொண்டிருந்த பிள்ளை யை காணவில்லை ?

கொட்டதெனியாவ, படல்கம பகுதியில் சிறு பிள்ளையொன்று காணாமற்போயுள்ளது.

கொட்டதெனியாவ, படல்கம பகுதியைச் சேர்ந்த 4 வயதான பெண் பிள்ளையொன்றே காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த பெண்பிள்ளை தனது பெற்றோருடன் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோதே காணாமற்போயுள்ளது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவிக்கின்றார்.

சிறுமி காணாமற்போனமை தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்திற்கு இன்று (12) காலை 7 மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாகவும் பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுதவிர காணாமற்போன பிள்ளையை தேடி பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தொழிநுட்பக் கல்லூரிக் கிணற்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு.

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியின் கிணற்றிலிருந்து இன்று காலை 11.00 மணியளவில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் ரக வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று கிணற்றை இறைத்து சுத்தப்படுத்திய தொழிலாளர்களே மேற்படி குண்டை மீட்டுள்ளனர்.
இதுவரை காலமும் குறித்த கிணற்று நீரையே மாணவர்கள் குடி தண்ணீராக பருகி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 5 செப்டம்பர், 2015

கொள்ளைக் கும்பல் அட்டகாசம் உதவிக்கு ஓடியவருக்கு வாள்வெட்டு

வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35 பவுண் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் அபாயக்குரல் எழுப்பவே, அங்கிருந்த நபர் தனது சகோதரியின் வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கு நின்ற 
கொள்ளையர்கள் ஓடிச்சென்றவர் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக
 விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தொழிலுக்கு சென்று வந்த இளைஞனை, இணுவில் துரை வீதியில் இடைமறித்த இளைஞர்கள் சிலர், நேற்று வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உடுவில் கிழக்கு செட்டி வீதியினை சேர்ந்த விஜயரஞ்சன் சுரேஸ் (வயது 24) என்பவரே கழுத்தில் 
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மூதாட்டிக்கு தலையில் முளைத்த கொம்பால் அவதி????

தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது.
அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார்.
இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது.
இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு இந்த அதீத வளர்ச்சியின் காரணம் புலப்படவில்லை.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தலைமுடியை அலசும்போது எதிர்பாராத விதமாக கொம்பில் இடித்துக் கொண்டதில், அது அசுர வேகத்தில் மீண்டும் வளரத் தொடங்கியது.
வெறும் 6 மாதங்களில் அது சுமார் 5 அங்குல உயரத்துக்கும், 2 அங்குல அகலத்துக்கும் வளர்ந்துள்ளது.
இந்தக் கொம்பு நமது உடலின் நகம், முடி வளர்வதற்கான முக்கிய புரோட்டினாக விளங்கும் கேரட்டீனால் ஆனது. நம் உடலின் மீது அதிகமாக சூரிய ஒளி படும் பாகங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்படலாம்.
இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலானோருக்கு இவ்வகை புற்றுநோய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.   அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள்
 முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் 
செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை 
உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.   இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விரைவில் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
  புதிய அரசாங்கத்தில், அரச துறையில் 10 லட்சம் 
புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 ஆகஸ்ட், 2015

கடும் வரட்சி! லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு???

இலங்கையில் வரட்சி காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சுமார் இரண்டு இலட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் மக்கள் வரட்சி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கான குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தேவையான நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நவற்கிரி காலநிலை