siruppiddy

வியாழன், 9 ஜூலை, 2015

ஆடை மாற்றுவதை சொல்ஃபோனால் படம் பிடித்து; ஆண் நண்பருக்கு அனுப்பிய பெண்

 பெங்களூரில் இளம்பெண் ஆடை மாற்றுவதை கூட இருக்கும் நெருங்கிய தோழி பெண் படம்பிடித்து தன் ஆண் நண்பருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருக்கு பல மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் தங்குவதற்கு Paying Guest (P.G.) எனப்படும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.
இந்திராநகர் பகுதியில் உள்ள Paying Guest விடுதியில் பக்கத்து மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் பொறியாளர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நம்ரதா என்ற தனியார் நிறுவன பெண் ஊழியரும், அந்த பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கம் காட்டிய நம்ரதா, அவரை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணூம், நட்பின் அடிப்படையில் இவ்வாறு செய்வதாக நினைத்துள்ளார்.
மேலும், அந்த பெண் உடை மாற்றும்போது, குளிக்கும் போதெல்லாம், விளையாட்டாக செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில், தனது அரைகுறை படங்கள் வெளியிடப்பட்ட விடயம் அந்த பெண்ணுக்கு 
தெரியவந்துள்ளது. அந்த படங்கள் அனைத்தும், நம்ரதா எடுத்தவை என்று தெரியவந்ததால், உடனடியாக இந்திராநகர் பொலிசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நம்ரதா மீது இந்திய தண்டனை சட்டம் 354, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்றவற்றின்கீழ், பெண்ணின் மாண்பை குலைத்ததற்காக வழக்குப்பதிவு செய்தனர்.மேலும்,போலீஸார்
 நம்ரதாவிடம் நடத்திய விசாரணையில், விவாகரத்தான நம்ரதா, ஜெயதேவ் என்ற வேறு ஆண் நண்பருக்கு அந்த பெண்ணின் அரைகுறை படங்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை