siruppiddy

செவ்வாய், 14 ஜூலை, 2015

இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்

யாழ்  மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (34 வயது) என்ற இளம்குடும்பஸ்தரைக் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கே.கே.எஸ். வீதி மல்லாகத்தில் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது,  அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதற்குப் பதிலளித்தவாறு தனது மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அவர் திரும்பி வராததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரின் தொலைபேசிக்கு அழைப்பபை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து அவரின் குடும்பத்தினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை