பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோயை கட்டுப்படுத்தி வருவது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) பிறக்கும்போது எய்ட்ஸ் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயிற்காக அவருக்கு 6 வயது முதல் தகுந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு பின் சிகிச்சையை தொடராத அவர் மருத்துவமனைக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்.
தற்போது, 18 வயது நிறைவடையும் நிலையில் உள்ள அந்த பெண்ணை மருத்துவர்கள் அண்மையில் பரிசோதனை செய்தபோது ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 12 வருடங்களாக எய்ட்ஸ் நோயிற்கு எந்தவித சிகிச்சையும் எடுக்காத நிலையில், அவர் தன்னுடைய நோய் மேலும் பரவாமலும், அபாயமாக மாறாமல் கட்டுக்குள் வைத்திருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதற்கு என்ன காரணம் என மருத்துவர்களுக்கு இதுவரை புரியாத புதிராக இருந்தாலும் கூட, இளம்பெண்ணின் உடலுக்குள் இயற்கையாகவே எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கிறதா என்ற சந்தேகமும் மருத்துவர்களுக்கு எழுந்துள்ளது.
பாரீஸில் உள்ள Pasteur Institute மருத்துவமனை நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் கனடாவில் உள்ள Vancouver நகரில் கடந்த திங்களன்று இந்த அதிசய நிகழ்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதுபோன்ற நோய் உடைய மிசிசிபியை சேர்ந்த பெண் ஒருவர்
27 மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தியுள்ளார்.
ஆனால், அந்த பெண்ணை மிஞ்சும் அளவிற்கு
தற்போது பாரிஸ் இளம்பெண்ணின் ஆரோக்கியம் உள்ளது மருத்துவ துறைக்கு சவாலாக அமைந்துள்ளதாக Asier Saez-Cirion என்ற மருத்துவர்
கூறியுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை இல்லாமலே அந்த இளம்பெண்ணால்
வாழ்நாள் முழுவதும் தற்போது உள்ள ஆரோக்கியத்துடன் வாழ முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்ணின் உடல் கூறுகளை பல அதிநவீன சிகிச்சைகளுக்கு
உட்படுத்தி ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கான விடை தெரியும் என்றும் மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக