siruppiddy

சனி, 26 மார்ச், 2016

கேரள கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது!

வவுனியாவில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து ஹயஸ்ரக வாகனம் ஒன்றில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சாவுடன் வந்த இளைஞனே வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்றுக் காலை 9.00 மணியளவில் வவுனியா பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவ லின் அடிப்படையில் குறித்த நபரின் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் இருந்து பெறுமதி வாய்ந்த கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இதுவரையில் பிடிக்கப்பட்ட அதிகூடிய கேரளா கஞ்சா இதுவெனவும் பொலிஸார் 
குறிப்பிடுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2016

திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிகனடா முன்வந்துள்ளது

இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.
இலங்கையின் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்த
 கனேடியத் தூதுவர் ஷல்லி வைற்றிங் அம்மையார், இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஏனைய தேவையான வசதிகளையும் கனடா வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக கவனத்தை இலங்கை பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கனேடியத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 20 மார்ச், 2016

பிள்ளையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்திததாயும்பலி !

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பளை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் கிணற்றில் வீழந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தனது ஒன்றரை வயதுப் பிள்ளை கிணற்றுக்குள் வீழந்து விட்டதைக் கண்ட தாய், தனது பிள்ளையைக் காப்பாற்ற கிணற்றுக்குள் 
குதித்திருக்கின்றார்.
இந்நிலையில் தாயும் பிள்ளையும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
பெரிய பளையைச் சேர்ந்த தயபோதினி ஜெயரஞ்சன் (வயது 31) என்ற தாயும், அவரது பிள்ளையான ஜெயரஞ்சன் ஜினோஜன் என்ற ஆண் குழந்தையுமே இறந்தவர்களாவர்.
இவர்கள் இருவரினது சடலங்கைளையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள பளை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 2 மார்ச், 2016

ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அட்டகாசங்கள்!!!

முல்லைத்தீவி,தேவிபுரம் ஆ பகுதியில் அமைந்துள்ள அ,த,க,பாடசாலையில் மாணவர்கள் மீது ஆசிரியர்களின் அட்டகாசங்கள்!!!
இன்றும் வளமைபோலவே மாணவர்கள் அப் பாடசாலைக்கு கல்வி கற்க சென்றிருந்தனர் அங்கு அவர்கள் சென்ற துவிச்சக்கரவண்டிகளை ஓரமாக மாணவர்கள் விடவில்லையென கூறி குறித்த மாணவர்களின் துவிச்சக்கரவண்டிகளுக்கு காற்றைக் களட்டி விட்டதுடன் வால்க்கட்டைகளை ஆசிரியர்கள் வேலிக்கு வெளியால் வீசியதுடன் துவிச்சக்கரவண்டிகளை பாடசாலைக்கு பின்புறமாக மறைத்து
 வைத்துள்ளனர்
குறித்த மாணவர்கள் தங்கள் துவிச்சக்கரவண்டிகளுக்கு நிகழ்ந்த பரிதாப நிலையை கண்டு அதிற்சி அடைந்ததுடன் மிகுந்த வேதனையும் அடைந்தனர் தங்கள் வண்டிகளை உறுட்டி சென்ற மாணவர்கள் முன் வீதிக்கு ஓராமாக அமைந்துள்ள துவிச்சக்கரவண்டி திருத்தினரின் உதைவியை நாடிய போது,அவர் கூறிய விடையத்தை இங்கே தருகின்றோம்-என்னிடம் உங்கள் 33 வண்டிகளுக்கும் வால்க்கட்டைக்கு எங்கே போவது எனச்சொல்லி கைவிரித்துள்ளார்
ஆசிரியர்களின் செயலால் மாணவர்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை தங்கள் வண்டிகளை கொழுத்தும் வெய்யிலில் தள்ளிச்சென்று வீடு சேர்த்தனர்
இது போன்ற ஆசிரியர்களின் நயவஞ்சக செயல்கள் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தொடச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 29 பிப்ரவரி, 2016

யாழ் நுழைவாயில் செம்மணியில் குப்பை கொட்டினால் அபராதம்!

செம்மணி வீதியின் இருமருங்கிலும் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி
 பகுதியில்
 குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. அங்கு தற்போது விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் 
விதிக்கப்படுகின்றது.
தொடர்ந்து குப்பை கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியன 
அறிவித்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்

கிண்ணியா, அண்ணல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் இன்று திங்கட்கிழமை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முஹமது பர்ஷாத் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:- குறித்த சிறுவன், மீன் வாங்குவதற்காக தாயிடம் பணம் பெற்றுக்கொண்டு தனது 
நண்பனுடன்
 கிண்ணியா கட்டையாற்று பாலத்தடிக்குச் சென்றுள்ளார். மீன் வாங்குவதை விடுத்து, கட்டையாற்றில் இருவரும் குளித்துள்ளனர். அந்த நேரத்தில் பலமான நீரோட்டம் இருந்ததால் குறித்த சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். பிரதேசவாசிகள் உடனடியாக
 தேடுதல்
 நடவடிக்கையை மேற்கொண்டு சிறுவனை வெளியில் எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கு சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனளிக்கவில்லை. சடலம், பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர் -
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 17 பிப்ரவரி, 2016

பயணிகள் பணியாளர் விமானம் மீது லேசர் தாக்குதல்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 14.02.16.ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டு இருந்தவேளையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தரையில் இருந்த நபர் ஒருவர் விமானத்தை நோக்கி லேசர் கதிர் சாதனத்தை பிடித்துள்ளார். லேசர் கதிர் விமானியின் கண்களில் பட்டு அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்தினை நோக்கி திருப்பப்பட்டது.
பார்வை பாதிப்புக்குள்ளான விமானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தினால் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
மேலும் வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது மேற்கொள்ளப்பட்ட லேசர் கதிர் கொண்டு தாக்குதல் குறித்து மெட்ரோ பொலிட்டன் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>></


நவற்கிரி காலநிலை