கிண்ணியா, அண்ணல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் இன்று திங்கட்கிழமை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முஹமது பர்ஷாத் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:- குறித்த சிறுவன், மீன் வாங்குவதற்காக தாயிடம் பணம் பெற்றுக்கொண்டு தனது
நண்பனுடன்
கிண்ணியா கட்டையாற்று பாலத்தடிக்குச் சென்றுள்ளார். மீன் வாங்குவதை விடுத்து, கட்டையாற்றில் இருவரும் குளித்துள்ளனர். அந்த நேரத்தில் பலமான நீரோட்டம் இருந்ததால் குறித்த சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். பிரதேசவாசிகள் உடனடியாக
தேடுதல்
நடவடிக்கையை மேற்கொண்டு சிறுவனை வெளியில் எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கு சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனளிக்கவில்லை. சடலம், பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர் -
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக