siruppiddy

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போதனா வைத்தியசாலை 'பாஸ்' நடைமுறை நீக்கம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும்
 நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக காலை 6மணிமுதல் காலை 6.30 மணிவரை,
மதியம் 12மணி தொடக்கம் பி.ப1மணி வரை, மாலை 5மணி தொடக்கம் 6 மணிவரை காலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்க மாத்திரம் அனுமதிக்கப்படும்.
விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்காக இதுவரை காலமும் இருந்து வந்த பாஸ் அனுமதி நடைமுறை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதோடு ஒரே நேரத்தில் ஒரு நோயாளியின் அருகே இரு பார்வையாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பொதுமக்கள் தமது தேவைக்கும் நோயாளர்களின் தேவைக்கும் என எடுத்து வரும் பொலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர்க் கோம்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை வைத்தியசாலை வளாகத்தில் விட்டுச் செல்லாதுதம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
வைத்தியசாலை வளாகத்தினுள் வெற்றிலை,சிகரெட்,மதுபானம், உள்ளடங்கிய போதைப் பொருட்களை எடுத்து வருவது,பாவிப்பது,நோயாளர்களுக்கு வழங்குவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
சிறுவர்கள், முதியவர்கள் மிக இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் இவர்கள் இயன்றவரை விடுதிகளில் பார்வையாளர்களாக வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.தீவிர சிகிச்சைப் பிரிவு,அதி தீவிர சிகிச்சைப் பிரிவு,பிரசவவிடுதிகள்,
 குழந்தை விடுதிகள் போன்றவற்றில் சிகிச்சை பெறுபவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்குள் உள்ளதால் இயன்றவரை மேற்படி பகுதிக்கு பார்வையாளர்களாக வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




புதன், 28 அக்டோபர், 2015

கஞ்சா மீட்பு அதிரடிப் படை உத்தியோகத்தரின் வாகனத்திலிருந்து ! சந்தேக நபர் கைது

அதிரடிப் படையினரின் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சாவினை அடுத்து குறித்த வாகனத்தினை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் யாழ்.பண்ணை பகுதியில் நின்ற வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 30g கேரள கஞ்சா யாழ்.பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வாகனத்தை ஓட்டி வந்தவரையே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்.பொலிஸார் நேற்றய தினம் தெரிவித்திருந்தனர்
இந்நிலையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்ட வாகனம் ஒரு அதிரடிப்படை உத்தியோகஸ்த்தரின் குடும்பத்தினர் பயணித்த வாகனம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
குறித்த வாகனம் யாருடையது என்பதை முன்னதாகவே அறிந்திருந்த பொலிஸார் அந்த விடயம் ஊடகங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் கைதான நபர் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு அருளானந்தம் அபிதா..24.10.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
  அருளானந்தம் தம்பதிகளின்.  செல்வ  புதல்விஅபிதா தனது 
பதின் மூன்றாவது  பிறந்த நாளை. 24.10.15.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற 
சகல கலைக்கும் பெற்று 
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ 
இணையமும். நிலாவரை இணையமும்
 வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

வீட்டிஇன் கூரையை பிரித்துத் திருடிய மருமகள் விளக்க மறியலில்

யாழ்.சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் வீட்டில் மாமியார் இல்லாத நேரம் பார்த்து ஏணி வைத்து ஏறிக் கூரை பிரித்துத் திருடிய மருமகளை எதிர்வரும் -30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று முன்தினம் 19 ஆம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
19 வயதுடைய மருமகள்  கடந்த ஆகஸ்ட்-16 ஆம் திகதி வீட்டின் கூரை பிரித்து உள்ளிறங்கி அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணம்,மடிக் கணணி மற்றும் கவரிங் நகைகள் ,சிம் அட்டை என்பவற்றைத் திருடியுள்ளார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்துத் திருட்டுப் போன சிம் அட்டையின் பாவனை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவ்வீட்டின் மருமகள் முறையிலான பெண்ணொருவரைக் கடந்த -18 ஆம் திகதி கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் திருடியதைக் குறித்த பெண்மணி ஒப்புக் கொண்டுள்ளதுடன் திருடிய பொருட்களைத் தன் காதலனுக்குக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அவற்றைப் பறிமுதல் செய்த பொலிசார் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளமையும் 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 20 அக்டோபர், 2015

நம்பத்தகுந்த ஆதாரம் இல்லையாம் பாலியல் இலஞ்சம் கோரியதற்கு!!!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் எழுத்து மூல முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு குறித்து, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால், விசாரணைகள் 
மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் இரண்டாவது முறையாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரால் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரக பிரதிநிதியும் இணைந்து கொண்டார். குறித்த குழுவினர்
 முறைப்பாடு
 முன்வைத்த பெண் உள்ளிட்ட பலரிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து குறித்த குழுவினர் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில்
 கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 19 அக்டோபர், 2015

ரயில் தடம்புரண்டதில்யாழ் ரயில் சேவை ரத்து``

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரவு நேர தபால் ரயில்கள் நான்கு இன்றையதினம் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசந்துறை மற்றும் தலைமன்னார் நோக்கி செல்லும் ரயில்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே முனபதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்களின் பணம் மீளவழங்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் 
தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல – கல்கமுவ வரையான பகுதியில் இன்று பிற்பகல் 03.45 அளவில் ரயிலொன்று தடம்புரண்டதில் வட பகுதிக்கான ரயில் போக்குவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 13 அக்டோபர், 2015

போக்குவரத்து அமைச்சின் அதிரடி தீர்மானம் ???

அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்த அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டங்களை வகுப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு தற்போது 10,000 ரூபா வரை அபராதம் 
விதிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை