siruppiddy

சனி, 11 அக்டோபர், 2014

நடைபெற்றது பரீட்சார்த்த சேவையாக பளை யாழ் புகையிரதசேவை!

பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் பரீட்சார்த்தமான இறுதி புகையிரத் சேவை இடம் பெற்றது.
பளையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் பாரம்பரிய கைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுனர் இந்தியாவின் புகையிரதப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் அரச உயர் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவாகள் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத்தில் பயணம் செய்தார்கள்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலைய திறப்பு விழாவையும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையையும் திங்கள் கிழமை ஆரும்பித்த வைக்கவுள்ள நிலையில் இன்ற இந்த பரீட்சார்த்த புகையிரத சேவை இடம் பெற்றுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திறக்கு வந்த புகையிரதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்து கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 10 அக்டோபர், 2014

புராதன பொருட்களுடன் புலியங்குளத்தில் இருவர் கைது!

 புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா - புலியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புலியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்துள்ளனர். அதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் இருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புலியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இலங்கை பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தார் ஆப்கானிஸ்தான் பிரஜை!

குவைத்தில் வசித்துவந்த தனது காதலியான 33வயதான இலங்கை பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஹாலில் பிரதேசத்திலுள்ள இடம்மொன்றில் வைத்தே அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த இலங்கை பெண் தனது நண்பருடன் உறவை கொண்டிருந்ததாக சந்தேகித்தே தாம் அவரை கொலை செய்ததாக ஆப்கானிஸ்தானியர் ஏற்றுக்கொண்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 9 அக்டோபர், 2014

அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். குறைந்த செலவில்

 பெண்களின் பல்வகை நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது கீரைத்தண்டு! குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
   
பச்சைத்தண்டு கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும். செங்கீரைத்தண்டு பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும்.

 

திங்கள், 6 அக்டோபர், 2014

தாயாரின் நிலை கண்டு மகள் தற்கொலை முயற்சி

யாழ். ஆணைக் கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த பி. விமலதேவி (வயது 46) 5 பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சமயம் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

8 பிள்ளைகளை பெற்ற அவரது தாய் மகளுடன் இருந்து பிரிந்து சென்றும், ஏனைய பிள்ளைகளை கவனிக்காமல் விட வீதியில் தனது தாய் அலைந்து திரிவதை கண்டு துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும் பிள்ளைகளின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்!

அச்சுவேலியில்  சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குட்டியப்புலம், செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு கொப்பி, பென்சில்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள தோட்டத்துக்குள் கூட்டி சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தார்.
தனக்கு நடந்தவற்றை சிறுமி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அப்பகுதி கிராம சேவையாளர் தெல்லிப்பழை பிரதேச நன்னடத்தை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக நன்னடத்தை உத்தியோகத்தர் கடந்த 26ஆம் திகதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் யாழ்.பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, சந்தேக நபரை கைதுசெய்து மன்றில் முற்படுத்துமாறு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை செல்வநாயகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் சிறுவர் நீதிமன்ற நீதிவான் ஜீவராணி கறுப்பையாவின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

வாய் விட்டு சிரித்தால் 32 பற்களும் தெரிகிறது என்பார்கள். ஆனால் ஒரு சிறுவனுக்கு கூடுதலாக தெரிகிறது. இவரின் பற்கள் இரண்டு வரிசையாக காட்சியளிக்கின்றனர். இங்கிலாந்தில் சாக் பிரவுன் என்ற எட்டு வயது சிறுவனுக்கு இது போன்ற கூடுதலான பற்களால் சாப்பிடுவதற்கோ அல்லது வேறு எந்த வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என சிறுவனது தாயார் கூறுகிறார். ஆனால் பல் துலக்குவதற்கு மட்டும் கூடுதல் நேரம் ஆகிறதாம்.
திமிங்கிலத்தை போன்று இரண்டு அடுக்குகளாக பற்கள் உள்ளதால் இச்சிறுவனது நண்பர்கள் இவரை ஜாஸ் என்று புணைபெயரில் அழைக்கிறார்கள். தற்காலிக பற்கள் முழுமையாக விழுந்து முளைப்பதற்கு காத்திருக்கிறோம் பின்னர் இரண்டு மூன்று வருடத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து பற்களை சீரமைக்க உள்ளோம் என்பதாக இச்சிறுவனது தாயார் தெரிவித்துள்ளார்.
 

நவற்கிரி காலநிலை