2013/2014 ஆண்டு பல்கலைக்கழக கல்வியாண்டிற்கு இரண்டு புதிய பாட நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல்துறை தொடர்பான பாடநெறியொன்றும், களனி, சப்ரகமுவ மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் தொடர்பான பாடநெறியொன்றும் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 246,665 மாணவர்களில் 143,740 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். எனினும் 2013/2014 பல்கலைக்கழக கல்வியாண்டுக்கு 24,178 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்த 55,988 பேரில் 24,178 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டிருந்தது.களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல்துறை தொடர்பான பாடநெறியொன்றும், களனி, சப்ரகமுவ மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் தொடர்பான பாடநெறியொன்றும் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக