siruppiddy

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பூமியை நோக்கி வேகமாக வரும் சூரியப் புயல்! பூமியைத் தாக்குமா?

வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூரியப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் (அதாவது 4.02மில்லியன் கிலோ மீட்டர் வேகம்) என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாளை இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வே. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் கூறுகிறார்.
இது பார்க்க சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது. ஆனால் பூமிக்கு வரும்போது சூரியப் புயல் என்ற அளவிலேயே வரும். சாட்டிலைட் தரவுகள் இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. அதன் மோசமான ஆற்றல் துகள் நெருப்பு மயமாக பூமிக்கு மேலேயோ, வடக்குப் பகுதியிலோ செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் காந்தப் புலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் மின் வினியோக அமைப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மின்சார அமைப்பையே சேதம் செய்து விடக்கூடியதல்ல, இதனால் சாட்டிலைட்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன்களில் சிறிய அளவு தொந்தரவு ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர்.
மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் வேகத்தில் இது வந்து கொண்டிருக்கிறது என்பதால் நாளை பூமிக்கு அருகில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை பொதுவாக மக்களுக்கு ஊறு விளைவிப்பதல்ல. ஆனால் இந்த முறை, சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் திசை நம்மை நோக்கி நேராக இருக்கிறது. இதன் அதி ஆற்றல் மிக்க மற்றும் காந்தமாக்கச் சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர்.
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை