siruppiddy

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

மீண்டு தாய்மொழியை மறந்த இளைஞர் (காணொளி இணைப்பு)

 அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் ஒருவாரமாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனது தாய் மொழியை மறந்து விட்டு சீன மொழியில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மெக்மேகன் (Ben McMahon- age 22) என்ற நபர் பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மெக்மேகன் கோமாவில் இருந்து மீண்டு எழுந்த போது அருகில் இருந்த செவிலியரை பார்த்து சீன மொழியில் பேசியுள்ளார்.
பின்னர் செவிலியரிடம் ஒரு காகிதம் மற்றும் பேனா கேட்டு வாங்கி சீன மொழியில், தனது தாய் மற்றும் தந்தை மீது மிகுந்த அன்புள்ளதாகவும், தான் உடல் நலம் தேறிவிட்டதாகவும் எழுதி காட்டியுள்ளார்.
இவரின் புது மொழி திறனை கண்டு குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் வியந்துள்ளனர்.
மேலும் மெக்கேனுக்கு தனது தாய் மொழியை நினைவுபடுத்த மூன்று தினங்கள் ஆகியுள்ளது. இவர் தனது பள்ளிக்கூடத்தில் சீன மொழி படித்து வந்தாலும், அதில் சரளமாக பேசக்கூடிய திறமை இல்லாதவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இவரின் பேச்சு திறனைக்கண்டு இவருக்கு சீன தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. மேலும் இவர் சீனாவிற்கு சென்று தனது பட்டப்படிப்பை தொடர உள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை