siruppiddy

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாணிக்கசோதி விபத்தினில் மரணம்!

.    பனிக்கன்குளம் பகுதியினில் ஏ-9 வீதியினில்  இடம்பெற்ற வாகன விபத்தினில் முன்னணி கருத்தியலாளரான அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி (வயது 74) மரணமாகியுள்ளார்.அவர்  பயணித்த ஹயஸ் வான் நேற்றிரவு திங்கட்கிழமை விபத்திற்குள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவருடன் மற்றொருவரான செல்லத்துரை செல்வகுமார்(வயது 70) என்பவரும் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவிலை சேர்ந்த மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் (வயது 74), ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கத்தின் சகோதரருமாவார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இவர்களது வான், வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
1990 ம் ஆண்டினில் இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலப்பகுதியினில் வன்னி காடுகளிலினுள் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகள் தலைமைக்கும் அப்போதைய பிரேமதாசா அரசிற்குமிடையேயும் சமரசப்பேச்சுக்களை நடத்திய முகவராக மாணிக்கசோதி செயற்பட்டிருந்தார்.விடுதலைப்புலிகள் தலைமை மீது கடைசி வரை பற்றுக்கொண்டிருந்ததுடன் பகிரங்கமாகவே அவர் அதனை வெளிப்படுத்தியும் வந்திருந்தார்.
கடைசியாக நடந்த வடமாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக அவர் களமிறங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை