siruppiddy

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

கட்டுநாயக்கவில் வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயத்தை இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 45 இலட்சம் பெறுமதியான நாணயங்கள் சந்தேகநபரிடம் இருந்து சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளை இன்று காலை இவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் என சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்....

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கிடையில் கை கைலப்பு: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களுக்கிடையிலான கை கைலப்பில் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலை ஆசிரியர்கள் இருவர், பாடசாலை விட்டு வெளியிடத்தில் மது அருந்திய வேளை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இடம்பெற்ற கைகலப்பின்போது, ஆசிரியர் ஒருவர் மற்றைய ஆசிரியரின் தலையில் போத்தலால்...

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

எதிர்வரும் வாரங்களில் யாழில் 1 காணிகள் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!

எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித் துள்ளது. யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளாக அவை இருந்த போதும், அவை இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிப்பதற்கான வர்த்தமானி...

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாணிக்கசோதி விபத்தினில் மரணம்!

.    பனிக்கன்குளம் பகுதியினில் ஏ-9 வீதியினில்  இடம்பெற்ற வாகன விபத்தினில் முன்னணி கருத்தியலாளரான அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி (வயது 74) மரணமாகியுள்ளார்.அவர்  பயணித்த ஹயஸ் வான் நேற்றிரவு திங்கட்கிழமை விபத்திற்குள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவருடன் மற்றொருவரான செல்லத்துரை செல்வகுமார்(வயது 70) என்பவரும் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவிலை சேர்ந்த மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் (வயது 74), ஜனாதிபதி சட்டத்தரணியும்...

சனி, 13 செப்டம்பர், 2014

ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன கப்பலை கனடியர்கள் கண்டுபிடித்தனர்

160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரித்தானிய ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். ship discovery ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, கடல் அகழாய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. "இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான்...

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பூமியை நோக்கி வேகமாக வரும் சூரியப் புயல்! பூமியைத் தாக்குமா?

வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூரியப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் (அதாவது 4.02மில்லியன் கிலோ மீட்டர் வேகம்) என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாளை இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வே. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியப் புயல்...

திங்கள், 8 செப்டம்பர், 2014

இரு புதிய பாடநெறிகள் ல்கலையில்

2013/2014 ஆண்டு பல்கலைக்கழக கல்வியாண்டிற்கு இரண்டு புதிய பாட நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல்துறை தொடர்பான பாடநெறியொன்றும், களனி, சப்ரகமுவ மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் தொடர்பான பாடநெறியொன்றும் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 246,665 மாணவர்களில் 143,740 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்....

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

மீண்டு தாய்மொழியை மறந்த இளைஞர் (காணொளி இணைப்பு)

 அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் ஒருவாரமாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனது தாய் மொழியை மறந்து விட்டு சீன மொழியில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த மெக்மேகன் (Ben McMahon- age 22) என்ற நபர் பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மெக்மேகன் கோமாவில் இருந்து மீண்டு எழுந்த போது அருகில் இருந்த செவிலியரை பார்த்து சீன மொழியில் பேசியுள்ளார். பின்னர்...

புதன், 3 செப்டம்பர், 2014

கட்டார் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 டோகாவுக்கும் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த கட்டார் எயார்வேய்ஸ் விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருள் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டமையை அடுத்தே இந்த அவரச தரையிறக்கம் நேற்று நிகழ்ந்தது. விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஒழுக்கு ஏற்பட்டதாக விமானி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 30 நிமிடங்களில் குறித்த விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது....

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தாயை விலைபேசிய வாலிபர் ஒருவர்

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். சீனாவின் குயாங்கான் (Guanghan) என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக நிபந்தனைகளுடன் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தில் இவர் விதித்த 4 நிபந்தனைகள் •அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும் •அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும். •போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது •வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம்...

நவற்கிரி காலநிலை