siruppiddy

வியாழன், 9 அக்டோபர், 2014

அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். குறைந்த செலவில்

 பெண்களின் பல்வகை நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது கீரைத்தண்டு! குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
   
பச்சைத்தண்டு கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும். செங்கீரைத்தண்டு பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும்.

 

திங்கள், 6 அக்டோபர், 2014

தாயாரின் நிலை கண்டு மகள் தற்கொலை முயற்சி

யாழ். ஆணைக் கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த பி. விமலதேவி (வயது 46) 5 பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சமயம் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

8 பிள்ளைகளை பெற்ற அவரது தாய் மகளுடன் இருந்து பிரிந்து சென்றும், ஏனைய பிள்ளைகளை கவனிக்காமல் விட வீதியில் தனது தாய் அலைந்து திரிவதை கண்டு துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும் பிள்ளைகளின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்!

அச்சுவேலியில்  சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குட்டியப்புலம், செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு கொப்பி, பென்சில்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள தோட்டத்துக்குள் கூட்டி சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தார்.
தனக்கு நடந்தவற்றை சிறுமி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அப்பகுதி கிராம சேவையாளர் தெல்லிப்பழை பிரதேச நன்னடத்தை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக நன்னடத்தை உத்தியோகத்தர் கடந்த 26ஆம் திகதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் யாழ்.பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, சந்தேக நபரை கைதுசெய்து மன்றில் முற்படுத்துமாறு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை செல்வநாயகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் சிறுவர் நீதிமன்ற நீதிவான் ஜீவராணி கறுப்பையாவின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

வாய் விட்டு சிரித்தால் 32 பற்களும் தெரிகிறது என்பார்கள். ஆனால் ஒரு சிறுவனுக்கு கூடுதலாக தெரிகிறது. இவரின் பற்கள் இரண்டு வரிசையாக காட்சியளிக்கின்றனர். இங்கிலாந்தில் சாக் பிரவுன் என்ற எட்டு வயது சிறுவனுக்கு இது போன்ற கூடுதலான பற்களால் சாப்பிடுவதற்கோ அல்லது வேறு எந்த வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என சிறுவனது தாயார் கூறுகிறார். ஆனால் பல் துலக்குவதற்கு மட்டும் கூடுதல் நேரம் ஆகிறதாம்.
திமிங்கிலத்தை போன்று இரண்டு அடுக்குகளாக பற்கள் உள்ளதால் இச்சிறுவனது நண்பர்கள் இவரை ஜாஸ் என்று புணைபெயரில் அழைக்கிறார்கள். தற்காலிக பற்கள் முழுமையாக விழுந்து முளைப்பதற்கு காத்திருக்கிறோம் பின்னர் இரண்டு மூன்று வருடத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து பற்களை சீரமைக்க உள்ளோம் என்பதாக இச்சிறுவனது தாயார் தெரிவித்துள்ளார்.
 

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

கட்டுநாயக்கவில் வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயத்தை இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 45 இலட்சம் பெறுமதியான நாணயங்கள் சந்தேகநபரிடம் இருந்து சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளை இன்று காலை இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் என சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கிடையில் கை கைலப்பு: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களுக்கிடையிலான கை கைலப்பில் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை ஆசிரியர்கள் இருவர், பாடசாலை விட்டு வெளியிடத்தில் மது அருந்திய வேளை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இடம்பெற்ற கைகலப்பின்போது, ஆசிரியர் ஒருவர் மற்றைய ஆசிரியரின் தலையில் போத்தலால் அடித்துள்ளார். இதன்போதே அவர் பலத்த காயத்திற்குள்ளானதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாடசாலை சமூகம் விசனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

எதிர்வரும் வாரங்களில் யாழில் 1 காணிகள் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!

எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன.
ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித் துள்ளது.
யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளாக அவை இருந்த போதும், அவை இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த வார இறுதியில் இந்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை