siruppiddy

வெள்ளி, 13 ஜூன், 2014

கூத்தாட்டம் போடும் மாணவர்கள்.

யாழ்ப்பாணம் மட்டுமல்ல உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிக வருமானத்தை ஈட்டித் தரக் கூடியது மதுபானசாலை ஆகும். அந்தளவுக்கு மதுப் பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.

இந் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழினத்தின் கல்வி கவலைக்கிடமாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரியதொரு பதவியில் இருந்து கொண்டு, எங்களை கடைசிக் காலம் வரை காப்பாற்றுவார்கள் என கற்பனையில் மூழ்கியிருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு பெரும் இடியாக விழுந்திருக்கின்றது.

கலாசாரமும் கல்வியும் தான் எமது மூலதனம். அந்தக் கலாசாரம் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், கல்வியும் எம்மில் இருந்து விலகுவதானது எமது இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து விடும் அபாய நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது.மதுபானசாலைகளில் அலைபோதும் மாணவர்களைக் காண்கின்றபோது எங்களை அறியாமலே கண்ணீரில் மிதக்கிறது கண்கள். இப்படியிருக்கும் போது அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலையை நினைக்கவே முடியாதுள்ளது.

இது இவ்வாறிருக்க, மதுவினை விற்று மாற்றான் குடும்பத்துக்கு அழிவை ஏற்படுத்தும் மதுபானசாலை உரிமையாளர்கள், தாங்களும் தாங்கள் சார்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செல்வதை அவதானிக்காதவர்களாக, சிந்திக்காதவர்களாக உள்ளமை பெரும் கவலையளிக்கின்றது.

புதன், 4 ஜூன், 2014

மட்டுவிலில் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுவிழா

.யாழ் மட்டுவில் மாதுமை மழலைகள் கல்விப் பூங்காவின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்புடன் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 02 மணி முதல் கல்விப்பூங்கா
 மைதானத்தில் இடம்பெற்றது.
இயக்குநர் சி.சிவகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்
 பா.கஜதீபனும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலய முன்பள்ளி உதவிக்
 கல்விப் பணிப்பாளர் சு.பாக்கியராஜா மற்றும் மட்டுவில் தெற்கு அமெரிக்க
 மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் வே.சுந்தரலிங்கம் ஆகியோரும் கலந்து
 கொண்டனர்.
இவ் விழாவில் சிறார்களின் மெய்வன்மை நிகழ்ச்சிகளும் கலைநிகழ்வுகளும்
 நடைபெற்றன.
வெற்றி பெற்ற சிறார்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பழையமாணவர்கள்,ஊரவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
                         
 
 

 

படித்ததில் பிடித்ததுநானும் நீர்வை மகனென்று!!

விளிம்பில் ததும்பும் பனித்துளிகள் சொட்ட‌
விரைவு வானம் கதிர்கள் உதிர‌
முத்திப்பூக்கள் சொட்டும் தேன் உறிஞ்சி
வாழ்க்கையே வாழையாய்ப்போன நம்மூரு
 
பதமரும்ப காத்திருந்து கொய்த குலைகள்
இதமாய் இருக்கை கட்டி – அதிவிரைவாய்
பட்டிமாடு படையிடையே பச்சைய ஊர்வலம்
கண்கொள்ளாக் காட்சி தரணியில் சொற்பம்தான்
 
கோமயம் கோமியம் தெருப்புழுதியுடன் சேர்ந்து
ஊரெல்லாம் மணம் பரவிட உலாவந்தகாலம்
நேற்றுவரை இரகசியமாய் என்னுள்ளிருந்து
பாடாய்படுத்துகின்றன – எழுதிவிட‌
 
புலரும் பொழுதில் அலறும் கண்டாமணியோசை
நாற்திசையும் – கண்விழிக்க கோரும் நாதமாய்
தொலைவில் கதைபேசும் சிறுபறவைகள் ஒலியுடன்
தேனாய் கலந்து காதுகளிற்கு புகும் இன்பம்
 
மாரிமழையில் பிறக்கும் குளங்கள்
என்பள்ளிப்பருவ நீச்சல் தடாகங்களாய்
நினைகையில் மனம் குளிரிது – மீண்டும்
ஊர் திரும்பனோ என்று மனம் ஏங்குது
 
கள்ளிப்பால், நாயுண்ணி, சுடுமுருங்கைக்கொட்டை
எள்ளிநகையாடும் எருக்கலம் பூ திமிர்
சொல்லியடித்து கதைமுடிக்கும் கிட்டிப்புல், கிளித்தட்டு
நெற்றில் தேடினாலும் மீண்டும் கிடையா
 
நேர்த்தியான தடிசேர்த்து ஊர்பாடும் வசந்தனடி
பார்த்திருந்து மகிழ்ந்தது ஊர் கூட்டமாய்
காத்தவராயன் அரிச்சந்திரன் அத்தியார் முற்றத்தில்
நித்திரையற்று முத்திரை பதித்த ஊர் – ஒருகாலம்
 
காளைகளை விரட்டி வீரம்பறையும் இளம்காளைகளை
மாலையிட்டு வரவேற்கும் சவாரித்திடல்
வேனிக்காலத்தில் இதமாய் துவண்டு
தனிப்போர்க்களமாய் மாறிவிடும் அருமை
 
நெய்தல் பாலையாகி ஈச்சம் பழம் கொய்ய‌
எய்யாதவனையும் குத்திப்பதம் பார்க்கும் ஈச்சம்பற்றை
பெய்யாமழைக்கு ஏங்கும் காலம்
வையாப்புகழ் வாய்ந்த பேச்சியம்மன் படையல்
 
மலரும் நினைவுகள் உதிர்ந்திடாவண்ணம்
புலரும் பொழுதினில் உறுதியெடுப்போம்
நிலவும் ஒருமுறை வியக்கட்டும் – பாரும் ஒருமுறை
பறை சாற்றட்டும் – நானும் நீர்வை மகனென்று
 




சனி, 31 மே, 2014

அந்தியேட்டி கிரிகை அழைப்பிதழ் அமரர் திரு பாலசிங்கம் திலகவதி

தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
                                                அமரர் :- பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு திரு பாலசிங்கம் திலகவதி அவர்களின் அந்தியேட்டி கீரிமலை வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் எதிர்வரும்.03.06.2014 .செவ்வாய்கிழமை  கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் 05.06..2014  வியாழக்கிழமை  இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து அன்னாரின் ஆத்மாசாந்திப்பிரத்தனயிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நன்றி இங்கனம்..குடும்பத்தினர்
 
 

வெள்ளி, 23 மே, 2014

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.

இன்று 23-05-2014 -33வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்      சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா  (தேவன்).தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும்இவர்களுடன்இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்
 உறவு இணையங்களும் ,இறை அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

திங்கள், 12 மே, 2014

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள்

பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 30 லட்ச ரூபா வரையில் அறவீடு செய்து நேபாளத்தின் ஊடாக ஐரோப்பிய, ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் வர்த்தகம் தொடர்பிலான தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு பாரியளவில் பணத்தை செலுத்தி ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேனவிய நாடுகளுக்கு சென்று அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டு நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறான சிலரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
போரின் பின்னர் பலர் ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் போலி ஆவணங்களுடன் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



ஞாயிறு, 4 மே, 2014

புகையிரதத்திலிருந்து கழன்று தனியாக பயணித்த**

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து கழன்ற இரண்டு பெட்டிகள் சுமார் 300 மீற்றர் வரையில் தனியாகப் பயணித்தாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில் பெட்டிகள் இருந்த பகுதியை நோக்கி மீண்டும் பயணித்த யாழ்.தேவி, அவ்விரு பெட்டிகளையும் இணைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் எவருக்கும் சேதமேற்படவில்லை என புகையிரதநிலைய அதிகாரிகள் தெரிவித்தினர்.

நவற்கிரி காலநிலை