siruppiddy

வியாழன், 26 டிசம்பர், 2013

மிளிர்ந்த மெட்ரோ ரயில் வண்ண பரிசு காகித்தால்

  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரிஸில் மெட்ரோ ரயில் விதவித வண்ண பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு உலா வந்தது.

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் லைன் 8-ல் வந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் தரையிலிருந்து கூரைவரை பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு வந்தது.
இதனுடைய புகைப்படம் டுவிட்டர் தளத்தில் “ஆபரேஷன் கிறிஸ்துமஸ்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இவ்வலங்காரம் செய்ததற்கு அடிப்படை நோக்கம் இம்மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் முகத்தில் புன்முறுவலை கொண்டு வருவதும், அவர்களது நகைச்சுவை உணர்வை தூண்டி மகிழ்ச்சியடைய செய்வதும் ஆகும்.

ஆனால் இம்மெட்ரோ ரயிலை அலங்காரத்துடன் பயணிக்க அனுமதிக்காமல் அலங்கார காகித தாள்களை களைந்துவிட்டு, மெட்ரோ ரயிலை ஓட்டி செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மாறாத சோகம் 09ஆவது ஆண்டு நினைவுதினம்.

சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்தவர்களின் 09ஆவது  ஆண்டு நினைவுதினம் நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.  இதன்போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டு, சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களுக்கு நினைவுகூர்ந்து   அஞ்சலி செலுத்தினர்.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

 

புதன், 18 டிசம்பர், 2013

நவற்கிரி மக்கள் இணையம் : கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது

நவற்கிரி மக்கள் இணையம் : கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது: மஸ்கெலியா வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு உட்புகுந்ததாகக் கூறப்படும் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய...

கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது


மஸ்கெலியா வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு உட்புகுந்ததாகக் கூறப்படும் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா கிலன்டில் மத்திய பிரிவு தோட்டத்தைச்  சேர்ந்த ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சிகிச்சை பெற்றுவரும் இவரைப்  பார்வையிடுவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில்  வைத்தியசாலைக்கு சென்ற மேற்படி இருவரும் நோயாளியை பார்வையிடுவதற்கு  அனுமதி கோரியுள்ளனர்.  இதன்போது நோயாளியைப் பார்வையிடுவதற்குரிய அனுமதி  மேற்படி இருவருக்கும் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் அலுவலக உத்தியோகத்தர்களுடன் வாய்த்தர்க்கத்தில் மேற்படி இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையிலேயே  வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு மேற்படி இருவரும் வைத்தியசாலையினுள் உட்புகுந்துள்ளனர்.

இவ்வாறு உட்புகுந்த இருவரையே மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி இருவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வயிற்றுக்குள் வைத்து போதைப் பொருளை கடத்திய ஆசாமி

வயிற்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திய வாலிபரை, ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தை சேர்ந்த வாலிபரே போதைப் பொருளை கடத்தியுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு விமானம் மூலம் வந்த போது, Nuremberg விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை, சுங்க அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு எக்ஸ்ரே எடுத்த பார்த்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது, கேன்னபிஸ் என்ற ஒரு வித போதை பொருளை 124 பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் இந்த பொட்டாலங்களும் வெளியெடுக்கப்பட்டு, அதன் எடை 860 கிராம் என உறுதி செய்யப்பட்டது.

மேலும் இந்த குறித்த நபரை குடியிருப்பை அதிகாரிகள் சோதனையிட்டதால், அங்கும் ஊக்க மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வியாழன், 12 டிசம்பர், 2013

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது!!!


யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளடன், இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை கரையோர காவல் படையினரும்  கடற்படையினரும் இணைந்து  மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
எட்டு ரோலர்  படகுகளில் வந்த இந்தியாவின் ஜனதாப் பட்டிணத்தையும் கோட்டைப் பட்டிணத்தையும் சேர்ந்த  மீனவர்கள் 30 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரும்  காங்கேசன்துறைப்

சனி, 7 டிசம்பர், 2013

மனைவிக்கு கணவன் கொடுத்த...


தூங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த பயங்கர ஷாக்

நவற்கிரி காலநிலை