siruppiddy

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வயிற்றுக்குள் வைத்து போதைப் பொருளை கடத்திய ஆசாமி

வயிற்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திய வாலிபரை, ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தை சேர்ந்த வாலிபரே போதைப் பொருளை கடத்தியுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு விமானம் மூலம் வந்த போது, Nuremberg விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை, சுங்க அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு எக்ஸ்ரே எடுத்த பார்த்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது, கேன்னபிஸ் என்ற ஒரு வித போதை பொருளை 124 பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் இந்த பொட்டாலங்களும் வெளியெடுக்கப்பட்டு, அதன் எடை 860 கிராம் என உறுதி செய்யப்பட்டது.

மேலும் இந்த குறித்த நபரை குடியிருப்பை அதிகாரிகள் சோதனையிட்டதால், அங்கும் ஊக்க மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை