இரு பெண்களைத் திருமணம் செய்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவிமாரையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குடும்பத்தகராறு அதிகரித்தமையினால் வாழ்வில் விரக்தியுற்று தனது உடலில்
மண்ணெண்ணையை ஊற்றி தனக்கு தானே தீ மூட்டி மரணத்தை தழுவியுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் கிளிநொச்சி மலையாளபுரம் தெற்கில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மரணமானவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவரது மரண விசாரணையை கிளிநொச்சி மாவட்ட மரணவிசாரணை அதிகாரி மேற்கொண்டார். கிளிநொச்சியில் முதல் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்க யாழ். கோண்டாவில் இன்னுமொரு
பெண்ணை திருமணம் செய்திருந்தார் எனவும் இதனால் இரு குடும்பங்களிடையேயும் பிரச்சினை அதிகரிக்க ஆத்திரமும் விரக்தியுமுற்ற இவர் பாழடைந்த கட்டடம் ஒன்றிற்குச் சென்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக