
கிளிநொச்சி கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள்,...