siruppiddy

வியாழன், 30 அக்டோபர், 2014

அமெரிக்கா, இந்தியா உதவிகளை வழங்கத் தயார் என அறிவிப்பு!

 பதுளை நிலச்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதேபோன்று மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 27 அக்டோபர், 2014

கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!!

h
வெள்ளவத்தை கடற்பரப்பில்  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை கடற்பரப்பில் உள்ள கற்பாறைகளுக்கிடையிலிருந்தே குறித்த  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

தொடருந்துகளின் முற்பதிவுகள் வியாழன் வரை நிறுத்தம்!

யாழ்- கொழும்பு செல்வதற்கான தொடருந்துகள்  அனைத்தும்
 இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத தொடருந்து நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான தொடருந்துகள் முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் தொடருந்துகள்  நிலையம் வருகை தந்தனர்.
இந்நிலையில், யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் தொடருந்து ஆகிய தொடருந்து இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன.
 
அத்துடன், யாழ் - கொழும்பு – மாத்தறை  ஞாயிற்றுக்கிழமை மட்டும் செல்லும் தொடருந்து இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.
இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காக, குறித்த தொடருந்துகள்  மேலதிகப் பெட்டிகளை இணைப்பது பற்றி உத்தேசிக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 அக்டோபர், 2014

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள். மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பசுக்களை இறைச்சிக்காக கொண்டு சென்ற மூவர் கைது…!!

நோர்வூட்  பகுதியில் பசு மாடுகள் மூன்றை இறைச்சிக்காக அனுமதிப் பத்திரம் இல்லாமல் கொண்டு சென்ற மூவர் நோர்வூட் பகுதியில் வைத்து இன்று (19) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசத்தில் இருந்து அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் குறித்த மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பொலிஸார் அந்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தியபோது, அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது
. பின்னர் மாட்டைக் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்த பொலிஸார் லொறியையும் கைப்பற்றினர். அத்தோடு பசு மாடுகளை பிரதான வீதியில் கொண்டு செல்லாமல் தோட்ட குறுக்கு வழியாக கொண்டு செல்ல முற்பட்டதாகவும், கால்நடை வைத்தியரின் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கொண்டு சென்றதாகவும் தொடர்ச்சியாக பால் கரந்து கொண்டிருக்கும் பசு மாடுகளையே இவ்வாறு
கொண்டு சென்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாடுகளின் பெறுமதி மூன்று இலட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. லொறியையும் சந்தேகநபர்களையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

அகதிகள் வழக்கின் தீர்பை ஒத்தி வைத்தது அவுஸ்ரேலிய நீதிமன்றம்!!

ஈழ அகதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈழ அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்று வந்தது.
இதன் போது அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கோ, நவுறு தீவுக்கோ மாற்றாமல், கடலில் கப்பல் ஒன்றில் ஒரு கால காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அவுஸ்திரேலியா மேற்கொண்ட குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித் அகதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதால் அவர்கள் உயிராபத்தை சந்திக்கவிருந்ததாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எனினும் ஈழ அகதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதே சரியான முடிவு என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 அக்டோபர், 2014

உதிரிப்பாகங்களை திருடிய இரு சுங்க அதிகாரிகள் கைது

கொழும்பு துறைமுகத்தில் உள்ள வாகனச்சாலையில் வாகன உதிரிப்பாகங்களை திருடிய இரு சுங்க அதிகாரிகளை துறைமுக பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை