திங்கள், 28 ஜூலை, 2014
செவ்வாய், 15 ஜூலை, 2014
நண்பனை கசூரினாக் கடலில்அமிழ்த்திக் கொல்ல முயன்ற இருவர் கைது!
காரைநகர் கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இதுகுறித்து அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
மற்றைய செய்திகள்
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இதுகுறித்து அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்படி நால்வரும் தப்பித்து ஓட முயன்ற போதும், அவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வியாழன், 3 ஜூலை, 2014
காற்றில் பறந்த வீடு: உயிர் பிழைத்த அதிசயம் (காணொளி)
அமெரிக்காவில் வீசிய புயல் காற்றினால் வீடு ஒன்று பறந்து சென்றதில் அதிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
கடந்த 16ம் திகதி அமெரிக்காவின் நெப்ரெஸ்கா நகரில் வீசிய பலத்த புயல் காற்றினால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுமார் 350 பேரின் வீடுகளை அடித்து சென்ற இந்த புயல் காற்றில், ஒரே ஒரு வீடு மட்டும் காற்றில் பறந்து சென்று மீண்டும் அதே இடத்தில் 180 டிகிரி கோணத்தில் அமர்ந்துள்ளது.
இந்த புயல் காற்று வீட்டை அடித்து செல்லும் காட்சி காணொளி ஒன்றில் படமாகியுள்ளது. இங்கிருந்த சாவேஜ் (25) என்ற நபர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் போர்வையுடன் இருந்துள்ளனர்.
காற்றில் போர்வை பறந்து சென்றாலும் இவர்கள் படுகாயம் ஒன்றும் அடையாமல் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
இதுகுறித்து புயலின் போது வீட்டிலில்லாத சாவேஜின் மனைவி ஜூலி கூறுகையில், இவர்கள் மூவரும் எப்படி தான் தப்பித்தார்களோ தெரியவில்லை என தளதளர்த்த குரலில் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
ஒபாமா படு மோசம்: மக்களின் நறுக் பதில்கள்
மற்றைய செய்திகள்
மற்றைய செய்திகள்
புதன், 2 ஜூலை, 2014
கட்டிப்புரண்டு குத்துச்சண்டை போடும் கரடி
மாமிச உண்ணிகளான கரடிகள் பொதுவாக கொலைவெறியுடனேயே காடுகளில் அலையும். அதே போல மனிதனுக்கும் எதிரானவையாகவே பார்க்கப்படுகின்றன.
இவ்வாறு இருந்தும் இராட்சத கரடி ஒன்று நட்புடன் குத்துச்சண்டை பயிற்சியாளருடன் கட்டிப்புரண்டு குத்துச்சண்டை போடுவது இணையத்தில் மிகவும் பிரபல்யமாகியுள்ளது.
மற்றைய செய்திகள்
இவ்வாறு இருந்தும் இராட்சத கரடி ஒன்று நட்புடன் குத்துச்சண்டை பயிற்சியாளருடன் கட்டிப்புரண்டு குத்துச்சண்டை போடுவது இணையத்தில் மிகவும் பிரபல்யமாகியுள்ளது.
மற்றைய செய்திகள்
புதன், 25 ஜூன், 2014
நடனமாடி சாதனை படைத்த இளம் இளம்பெண் (காணொளி, )
அமெரிக்காவில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் நடனமாடி சாதனை படைத்த இளம்பெண்ணின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லாண்ட் என்ற பகுதியில் கியெரா ப்ரிங்க்லி (20) என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
இவர் தனது இரண்டு வயதிலேயே கடுமையான பக்டீடியா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டதால், இவரது கை கால்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளிப்படிப்பை தன் சகோதரி உரையாவுடன் சேர்ந்து முடித்த இவர், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட தன் சகோதரியின் நடனத்தை பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளார்.
எனவே அவரும் நடனத்தில் அதிக கவனம் செலுத்தி, தன் சகோதரியை போலவே நடனமாடி அசத்தி வருகிறார்.
மேலும் தான் மருத்துவமனையில் செவிலியராய் பணிபுரிய வேண்டும் என்பதை பெரிதும் விரும்புவதாக கியெரா கூறியுள்ளார்.
போலி பாஸ்போட் தயாரித்தவரது53 நாடுகளுக்கு 200 பேரை அனுப்பினோம்!!!
போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் இதுவரை 53 நாடுகளுக்கு 200 பேரை அனுப்பியுள்ளதாக கைது செய்யப் பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 6 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இக்கும்பலின் தலைவனாக செயல்பட்ட இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- 12 ஆண்டுகளாக... நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போலிபாஸ்போர்ட், போலி விசா தயாரித்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். 2 முறை சிறைக்கு சென்றுவந்தாலும், எனக்கு வேறு தொழில் தெரியாது என்பதால், இந்த தொழிலை விட முடியவில்லை. இலங்கை வாசிகளுக்கு வெளிநாடுகள் கைகொடுத்து வாழ்வு கொடுக்கின்றன. சேவை மனப்பான்மையுடன்... எனவே, பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கைவாசிகளுக்கு, போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து கொடுக்கும் தொழிலை, இலங்கை மக்களுக்காக ஒரு சேவைமனப்பான்மையுடன் செய்து வருகிறேன்.
இதோடு எனது பிழைப்பும் ஓடுகிறது. சென்னையில் கெடுபிடி... உலகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து இந்த தொழில் நடக்கிறது. உலகம் முழுவதும் 53 நாடுகளில் எங்கள் ஆட்கள் உள்ளனர். இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும், பணிபுரியும் குடியுரிமை அதிகாரிகள் சிலரும், எங்கள் கூட்டத்தில் ரகசியமாக பணியாற்றுகிறார்கள் சென்னை விமான நிலையத்தில் மட்டும் கெடுபிடி அதிகமாக உள்ளது. கணக்கெடுப்பு... போலி பாஸ்போர்ட்டை எளிதில் தயாரித்துவிடுவோம். ஆனால் போலி விசா தயாரித்து, சம்பந்தப்பட்டவர்களை, வெளிநாட்டுக்கு அனுப்புவது மிகவும் கஷ்டமான காரியம்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும், இலங்கைவாசிகள் யார்-யார், எந்த நாட்டுக்கு செல்லவிரும்புகிறார்கள் என்பதை, ராஜன் மூலம் கணக்கெடுப்போம். அவர்களது புகைப்படத்தை வாங்குவோம். போலி பாச்போர்ட்டுகள்... காலாவதியான பாஸ்போர்ட்டுகள், வெளிநாடுகளுக்கு போக முடியாதவர்களின் பாஸ்போர்ட்டுகளை டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் விலைக்கு வாங்குவோம். அந்த பாஸ்போர்ட்டுகள் ஒன்றிற்கு, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுப்போம்.
அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள புகைப்படங்களை நீக்கிவிட்டு, போலி பாஸ்போர்ட்டு கேட்பவர்களின் புகைப்படங்களை அதில் ஒட்டுவோம். அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள முகவரிகளை நீக்கி விட்டு, போலி முகவரிகளை பதிவு செய்வோம். ஆக பழைய பாஸ்போர்ட்டு நம்பரில், போலி பாஸ்போர்ட்டுகள் தயார். காலாவதியாகும் போலி விசா... இந்த போலி பாஸ்போர்ட்டுகளில், போலி விசாவை தயாரித்து ஒட்டி விடுவோம். அந்த விசா மூலம், குறிப்பிட்ட நாடுகளுக்கு பலமுறை சென்றுவந்ததாக, போலி ரப்பர் ஸ்டாம்பு மூலம் போலி பாஸ்போர்ட்டில் பதிவு செய்துவிடுவோம். சுற்றுலா விசா மட்டுமே போலியாக தயாரித்து கொடுப்போம்.
சுற்றுலா விசா 10 நாட்களுக்கு மட்டும் செல்லுபடி ஆகும். அடுத்து காலாவதியான போலி விசாவை காட்டி, குறிப்பிட்ட நாடுகளின் உண்மையான விசாவுக்கு விண்ணப்பம் செய்வோம். புதிய விசா... போலி விசா மூலம் ஏற்கனவே குறிப்பிட்ட நாட்டுக்கு சென்று வந்ததுபோல, பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அதை உண்மை என்று நம்பி, உண்மையான விசாவை புதிதாக கொடுத்து விடுவார்கள். அந்த விசாவை வைத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். குடியுரிமை அதிகாரிகள்... எங்கள் கையாட்களாக செயல்படும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், எங்களது ஆட்களை சோதனை எதுவும் போடாமல் அனுப்பி விடுவார்கள்.
ஒரு ஆளை அனுப்புவதற்கு, குடியுரிமை அதிகாரிகளுக்கு ரூ.1.5 லட்சம் கொடுப்போம். வெளிநாடு சென்றவுடன், பாஸ்போர்ட் மற்றும் விசாவை கிழித்து எறிந்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள், அகதிகள்போல நடித்து விடுவார்கள். தொழில் ரகசியம்... இலங்கை அகதி என்றால், வெளிநாடுகளில் ராஜமரியாதை கொடுத்து தங்க வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில், அகதிகள் போர்வையை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமையை பெற்று நிரந்தரமாக, குறிப்பிட்ட நாட்டில் தங்கிவிடுவார்கள். இதுதான் எங்களது தொழில் ரகசியம். இந்த தொழிலை அழிக்க முடியாது. அனுமதி வேண்டும்.... இந்திய அரசு, இலங்கை மக்களை வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு நடத்த, எளிதில் அனுமதிபெற்று கொடுத்தால், இந்த தொழிலை நாங்கள் விட்டு விடுகிறோம். 200 பேர்... கடந்த 2010-ம் ஆண்டு முதல் சுமார் 53 நாடுகளுக்கு 200 பேர்வரை போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா மூலம் சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து முதலில் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது மெக்சிகோ அருகே உள்ள கோட்மாலா என்ற நாட்டுக்கு அனுப்பி வைப்போம். அங்கிருந்து விரும்பிய நாட்டுக்கு செல்வது எளிதில் முடிந்துவிடும். எனது குடும்பம்... எனக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 பேரையும் காதலித்து மணந்துள்ளேன். முதல் மனைவி பெயர் சரோஜினி, அவளுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவள் கனடா நாட்டில் வசிக்கிறாள். 2-வது மனைவி இளவரசி, சென்னை அரும்பாக்கத்தில் வாழ்கிறாள். அவளுக்கும் 4 பிள்ளைகள் உள்ளனர். 3-வது மனைவி பெயர் தனம். புதுக்கோட்டையைச் சேர்ந்த அவள்தான் தற்போது, என்னுடன் வாழ்கிறாள். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். 2-வது மனைவி இளவரசி, என்னுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வாழ்கிறாள்.
வெள்ளி, 13 ஜூன், 2014
கூத்தாட்டம் போடும் மாணவர்கள்.
யாழ்ப்பாணம் மட்டுமல்ல உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிக வருமானத்தை ஈட்டித் தரக் கூடியது மதுபானசாலை ஆகும். அந்தளவுக்கு மதுப் பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.
இந் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழினத்தின் கல்வி கவலைக்கிடமாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரியதொரு பதவியில் இருந்து கொண்டு, எங்களை கடைசிக் காலம் வரை காப்பாற்றுவார்கள் என கற்பனையில் மூழ்கியிருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு பெரும் இடியாக விழுந்திருக்கின்றது.
கலாசாரமும் கல்வியும் தான் எமது மூலதனம். அந்தக் கலாசாரம் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், கல்வியும் எம்மில் இருந்து விலகுவதானது எமது இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து விடும் அபாய நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது.மதுபானசாலைகளில் அலைபோதும் மாணவர்களைக் காண்கின்றபோது எங்களை அறியாமலே கண்ணீரில் மிதக்கிறது கண்கள். இப்படியிருக்கும் போது அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலையை நினைக்கவே முடியாதுள்ளது.
இது இவ்வாறிருக்க, மதுவினை விற்று மாற்றான் குடும்பத்துக்கு அழிவை ஏற்படுத்தும் மதுபானசாலை உரிமையாளர்கள், தாங்களும் தாங்கள் சார்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செல்வதை அவதானிக்காதவர்களாக, சிந்திக்காதவர்களாக உள்ளமை பெரும் கவலையளிக்கின்றது.
இந் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழினத்தின் கல்வி கவலைக்கிடமாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரியதொரு பதவியில் இருந்து கொண்டு, எங்களை கடைசிக் காலம் வரை காப்பாற்றுவார்கள் என கற்பனையில் மூழ்கியிருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு பெரும் இடியாக விழுந்திருக்கின்றது.
கலாசாரமும் கல்வியும் தான் எமது மூலதனம். அந்தக் கலாசாரம் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், கல்வியும் எம்மில் இருந்து விலகுவதானது எமது இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து விடும் அபாய நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது.மதுபானசாலைகளில் அலைபோதும் மாணவர்களைக் காண்கின்றபோது எங்களை அறியாமலே கண்ணீரில் மிதக்கிறது கண்கள். இப்படியிருக்கும் போது அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலையை நினைக்கவே முடியாதுள்ளது.
இது இவ்வாறிருக்க, மதுவினை விற்று மாற்றான் குடும்பத்துக்கு அழிவை ஏற்படுத்தும் மதுபானசாலை உரிமையாளர்கள், தாங்களும் தாங்கள் சார்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செல்வதை அவதானிக்காதவர்களாக, சிந்திக்காதவர்களாக உள்ளமை பெரும் கவலையளிக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)