siruppiddy

வியாழன், 3 ஜூலை, 2014

காற்றில் பறந்த வீடு: உயிர் பிழைத்த அதிசயம் (காணொளி)

அமெரிக்காவில் வீசிய புயல் காற்றினால் வீடு ஒன்று பறந்து சென்றதில் அதிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். கடந்த 16ம் திகதி அமெரிக்காவின் நெப்ரெஸ்கா நகரில் வீசிய பலத்த புயல் காற்றினால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 350 பேரின் வீடுகளை அடித்து சென்ற இந்த புயல் காற்றில், ஒரே ஒரு வீடு மட்டும் காற்றில் பறந்து சென்று மீண்டும் அதே இடத்தில் 180 டிகிரி கோணத்தில் அமர்ந்துள்ளது. இந்த புயல் காற்று வீட்டை அடித்து செல்லும் காட்சி காணொளி ஒன்றில் படமாகியுள்ளது. இங்கிருந்த சாவேஜ் (25) என்ற நபர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் போர்வையுடன் இருந்துள்ளனர். காற்றில் போர்வை பறந்து சென்றாலும் இவர்கள் படுகாயம் ஒன்றும் அடையாமல் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். இதுகுறித்து புயலின் போது வீட்டிலில்லாத சாவேஜின் மனைவி ஜூலி கூறுகையில், இவர்கள் மூவரும் எப்படி தான் தப்பித்தார்களோ தெரியவில்லை என தளதளர்த்த குரலில் அழுதுகொண்டே கூறியுள்ளார். ஒபாமா படு மோசம்: மக்களின் நறுக் பதில்கள்

  மற்றைய செய்திகள்
 
 
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை