siruppiddy

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கடலில் தத்தளித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.
கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும், இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.

கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும், இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்:திருமதி பரமநாதர் மனோன்மணி


சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் மனோன்மணி அவர்கள் 13-01-2014 தி்ங்கட்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா சீதேவன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன் வியாழாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன், உமாதேவி, ரத்தினகாந்தி, கணேஸ்வரன்(சுவிஸ்), குமரேஸ்வரன்(சுவிஸ்), சியாமளாதேவி, கருணாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சரஸ்வதி, திலகவதி, கமலாத தேவி, மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மகேஸ்வரி, அழகராசா, சந்திரமூர்தி, புவனேஸ்வரி, சுலோசநாம்பிகை, சிறிஸ்கந்தராசா, குமரேஸ்வரர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாபரன், பகீரதன், கயவதனி, சபேசினி, சாந்தினி, சாந்தன், சஞ்சிகா, சயீவன், மீரா, நிலானி, திலக்சன், மிதுனா, கிருசனா, கபிலன், விதுசன், மிதுலன், கர்யனா, கீர்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீர்திகன், அபினா, பிரவீன், சஸ்மிதா, சுபவீன், தரணிகாந், தாட்சாயினி, தேனுகாந், சுமிகா, சுருதிகா, சகானா, சாந்மகிழ்வானி, சாஸ்வதன், சபீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2014திங்கட்கிழமை அன்று  சிறுப்பிட்டி வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-
  இலங்கை செல்லிடப்பேசி: +94776161736
கணேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41434441891
குமரேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41444925926

வியாழன், 2 ஜனவரி, 2014

தூதரகத்தின் சமூக ஊடக பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்

 சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி பட்டறையினை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 "சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமூக ஊடக பட்டறை எனும் புதிய நிகழ்ச்சித் திட்டத்தை அறிவிப்பதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் பெருமைகொள்கின்றது.

சமூக ஊடக பட்டறை கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெறவுள்ளது. இங்கு ஆரம்பநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலை ஆகிய சமூக ஊடக பயற்சி நெறிகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதில் பங்கேற்பதற்காக இன்று வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 "கடந்த சில வருட காலப் பகுதியில் நாம் குறிப்பிடத்தக்களவு சமூக ஊடக பயிற்சிகளை நாம் நடத்தியுள்ளோம்" என அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் தெரிவித்தார். "மக்களுக்கு சமூக ஊடகத்தின் சிறப்பம்சங்களை கற்றுத்தருவதற்காக இந்த பயிற்சிகளை நாம் நெறிப்படுத்த விரும்புகின்றோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையர்கள் மத்தியில் சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன் இணையத்தில் மிகவும் சிறப்பான முறையில் மக்கள் செயற்பட ஊக்குவிப்பதே சமூக ஊடக பட்டறையின் மூலம் நாம் அடைய எத்தனிக்கும் பிரதான நோக்கமாகும்.
இந்த சமூக ஊடக பயிற்சி நெறிக்காக எவரேனும் இன்று முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க தூதரக இணையத்தளத்தினுடாக http://goo.gl/1Es2sW விண்ணப்பிக்க முடியும்.

இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. விண்ணப்பங்கள் முதலில் கிடைக்கும் ஒழுங்கில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதுடன் ஜனவரி மாத நடுப் பகுதியில் விண்ணப்பதாரிகளுக்கு பயிற்சிகள் தொடர்பான திகதி மற்றும் நேரங்கள் அறியத்தரப்படும். மேலதீக தகவல்களுக்கு

திங்கள், 30 டிசம்பர், 2013

காரணம் கண்டுபிடிப்பு ஓட்டுநர் இல்லாது பயணித்த ரயில் -

ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி ரயில் புற இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரின் தவறே ரயில் தனியே பயணித்தமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

குறித்த ரயில் என்ஜின் டிசம்பர் 05ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தானியங்கி கல்கிஸ்ஸை வரை சென்று கொண்டிருந்த போது மறித்து நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.

சனி, 28 டிசம்பர், 2013

இளநீர்இயற்கையின் வரப்பிரசாதம்


கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது. இளநீரில்

 பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை

 உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.



 

வியாழன், 26 டிசம்பர், 2013

மிளிர்ந்த மெட்ரோ ரயில் வண்ண பரிசு காகித்தால்

  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரிஸில் மெட்ரோ ரயில் விதவித வண்ண பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு உலா வந்தது.

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் லைன் 8-ல் வந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் தரையிலிருந்து கூரைவரை பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு வந்தது.
இதனுடைய புகைப்படம் டுவிட்டர் தளத்தில் “ஆபரேஷன் கிறிஸ்துமஸ்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இவ்வலங்காரம் செய்ததற்கு அடிப்படை நோக்கம் இம்மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் முகத்தில் புன்முறுவலை கொண்டு வருவதும், அவர்களது நகைச்சுவை உணர்வை தூண்டி மகிழ்ச்சியடைய செய்வதும் ஆகும்.

ஆனால் இம்மெட்ரோ ரயிலை அலங்காரத்துடன் பயணிக்க அனுமதிக்காமல் அலங்கார காகித தாள்களை களைந்துவிட்டு, மெட்ரோ ரயிலை ஓட்டி செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மாறாத சோகம் 09ஆவது ஆண்டு நினைவுதினம்.

சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்தவர்களின் 09ஆவது  ஆண்டு நினைவுதினம் நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.  இதன்போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டு, சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களுக்கு நினைவுகூர்ந்து   அஞ்சலி செலுத்தினர்.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

 

நவற்கிரி காலநிலை