siruppiddy

வியாழன், 2 ஜனவரி, 2014

தூதரகத்தின் சமூக ஊடக பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்

 சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி பட்டறையினை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 "சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமூக ஊடக பட்டறை எனும் புதிய நிகழ்ச்சித் திட்டத்தை அறிவிப்பதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் பெருமைகொள்கின்றது.

சமூக ஊடக பட்டறை கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெறவுள்ளது. இங்கு ஆரம்பநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலை ஆகிய சமூக ஊடக பயற்சி நெறிகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதில் பங்கேற்பதற்காக இன்று வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 "கடந்த சில வருட காலப் பகுதியில் நாம் குறிப்பிடத்தக்களவு சமூக ஊடக பயிற்சிகளை நாம் நடத்தியுள்ளோம்" என அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் தெரிவித்தார். "மக்களுக்கு சமூக ஊடகத்தின் சிறப்பம்சங்களை கற்றுத்தருவதற்காக இந்த பயிற்சிகளை நாம் நெறிப்படுத்த விரும்புகின்றோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையர்கள் மத்தியில் சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன் இணையத்தில் மிகவும் சிறப்பான முறையில் மக்கள் செயற்பட ஊக்குவிப்பதே சமூக ஊடக பட்டறையின் மூலம் நாம் அடைய எத்தனிக்கும் பிரதான நோக்கமாகும்.
இந்த சமூக ஊடக பயிற்சி நெறிக்காக எவரேனும் இன்று முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க தூதரக இணையத்தளத்தினுடாக http://goo.gl/1Es2sW விண்ணப்பிக்க முடியும்.

இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. விண்ணப்பங்கள் முதலில் கிடைக்கும் ஒழுங்கில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதுடன் ஜனவரி மாத நடுப் பகுதியில் விண்ணப்பதாரிகளுக்கு பயிற்சிகள் தொடர்பான திகதி மற்றும் நேரங்கள் அறியத்தரப்படும். மேலதீக தகவல்களுக்கு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை