siruppiddy

புதன், 18 செப்டம்பர், 2013

யாழில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு புகைப்படங்கள் இணைப்பு

 

)யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.வட மாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலக்சுமி, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநநரின் நிதியொதுக்கீட்டில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் இணைப்பு}






திங்கள், 16 செப்டம்பர், 2013

மின்சாரம் தாக்கி 10 வயது சிறுமி பலி



பொகவந்தலாவையில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டில் தனியே இருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற மின்ன

ழுத்தியை உபயோகிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

குளங்களை புனரமைத்து நெற்செய்கையினை அதிகரிக்க நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்களை திருத்தியமைத்து அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையின் அளவை அதிகரிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்களை விரிவுபடுத்தி அதன் கொள்ளளவை அதிகரித்து விவசாயிகளுக்கு நீர்பாய்ச்சலுக்கு தேவையான அளவில் நீரை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நீர்பாசன மற்றும் விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா, மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த குளங்களை புனரமைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நீர்பாசனத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டன

சனி, 14 செப்டம்பர், 2013

யாழ்தேவி சேவையை இன்று ஆரம்பித்தது


யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.

இன்று காலை ஓமந்தை ரயில் நிலையத்திலிந்து புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.
யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும்.

மேலும் 15ஆம் திகதி முதல் தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி வரை யாழ் தேவி உட்பட 3 ரயில்கள் பயணிக்கவுள்ளன.

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் வடக்கு ரயில் போக்குவரத்து காங்கேசன்துறை வரை நடத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வியாழன், 12 செப்டம்பர், 2013

அதிர்ச்சி வைத்தியசாலை உணவில் செத்த பாம்பு: குட்டி


கேரளாவில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணி, உடல் நலமில்லாத தனது மகனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

அங்குள்ள உணவு விடுதியில் அவர் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த உணவு பொட்டலத்தை திறந்து பார்த்தால் அதில் ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோனார்.

இது தொடர்பாக அவர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் புகார் செய்தார்.
தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த உணவு விடுதி முன்பாக கூடி போராட்டம் நடத்தினர். உடனே பொலிஸாருக்கும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்

 வைத்தியசாலை நிர்வாகம் புகார் செய்தது. அவர்கள் விரைந்து வந்தனர்.
பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, சம்பந்தப்பட்ட உணவு விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

அதைத் தொடர்ந்து அந்த உணவு விடுதியை மூட உத்தரவிடப்பட்டது. அங்கிருந்து சர்ச்சைக்குள்ளான உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஐரோப்பியாவிற்குள் நுழைய முயன்ற 700 பேர்!!


ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்குள் திருட்டுத்தனமாக மக்கள் குடியேறுபவர்களை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இத்தாலி கடல் வழியாக 4 படகுகள் மூலம் ஐரோப்பியவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 700 பேரை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் சிரியா, எகிப்து, எரிட்டிரியா, நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் பெரும்பாலானோர் சிரியாவை சேர்ந்த அகதிகள் என்று கூறப்படுகிறது.

மிகவும் அபாயகரமான இந்த இத்தாலி மற்றும் மால்டா வழியாக கடல் வழியாக திறந்தவெளி படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்குள் செல்கின்றனர் என்று அஞ்சப்படுகிறது.

இதுபோன்று அத்துமீறி நுழைபவர்களுக்கு அடைக்கலம் தர ஐரோப்பிய யூனியன் நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று இத்தாலி கேட்டுக்கொண்டுள்ளது.
 

சனி, 7 செப்டம்பர், 2013

யாழின் பெருமையை உலகறிய செய்வோம்

 
ஆசியாவிலே பிரசித்தி பெற்ற நுாலகம்.. யாழ் நுாலகம்.
.நாம்முன்பு ஆண்டு அனுபவித்த இடங்களும்எம்பாரம்பாரியமறக்கஉணவுப்பொருள்கள்
 
 
இன்றைய காலைப்பொழுதினில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட படம்
 
பருத்தித்துறை ஆனைவிழுந்தான்
 சந்தியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வைரவர் சூலம்....!!
 
பருத்தித்துறை தும்பளை
 நெல்லண்டை பத்திரகாளி அம்மன்
பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை
பத்திரகாளி அம்மன ஆலய வருடாந்த வேள்வி
 
யாழின் அழகுக்கு என்றும் பஞ்சமில்லை
“அட்சயகிருதியை” முன்னிட்டு பருத்தித்துறை நகரில் இன்று அலங்கரிக்கப்பட்ட நிலையில் நகைக்கடைகள்
 
பனங்கிழங்கு
மகிழ்வோம்
 
 
யாழ்ப்பாணத்து உற்பத்தி பொருளான பனம் கட்டி
 
யாழ்ப்பாண பலாப்பழம் சாப்பிடுவமா?
 
யாழின் பனங்காய் பணியாரம்
பப்பாசிப்பழம்
 
யாழின் திராட்சை பழத்திற்கு நல்ல மவுசு
 

சாப்பிடலாம் வாங்க !!!
 
 
யாழ்ப்பாணத்து பிரபலமான நாவல் பழம்
 
இயற்கையில் நம்ம யாழ்ப்பாணம்

 

நவற்கிரி காலநிலை