siruppiddy

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

குளங்களை புனரமைத்து நெற்செய்கையினை அதிகரிக்க நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்களை திருத்தியமைத்து அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையின் அளவை அதிகரிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்களை விரிவுபடுத்தி அதன் கொள்ளளவை அதிகரித்து விவசாயிகளுக்கு நீர்பாய்ச்சலுக்கு தேவையான அளவில் நீரை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நீர்பாசன மற்றும் விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா, மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த குளங்களை புனரமைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நீர்பாசனத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை