siruppiddy

சனி, 28 செப்டம்பர், 2013

பலர் கைது யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய


சுன்னாகம் பொலிசாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பரவலாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பலரின்மீது வழக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.துஸ்மிந்தா தலைமையில் பொலிசார் தமது பிரிவுக்கு உட்பட்ட பல இடங்களிலும் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

வீதிச்சோதனை நடவடிக்கைகளின் போது வீதி நடைமுறைகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்திய இருபத்தைந்து பேரும் மது போதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேரும் பிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்றும் பொது இடங்களில் இருந்து மதுப்பாவனையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேசத்தில் பகிரங்கப் பிடியானைக்கு உள்ளாகிய ஒருவரும் மற்றும் உடுவில் குப்பிளான் பகுதிகளில் இருந்து பிடியானை பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இவர்கள் இன்று நிதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை