siruppiddy

புதன், 29 ஏப்ரல், 2015

மூன்று பிள்ளைகளின் தாய் கிணற்றினுள் தவறி வீழ்ந்து பலி

உடுவில், மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை  கிணற்றுக்குள் நீர் அள்ளும் போது தவறி வீழ்ந்த மூன்று பிள்ளைகளின் தாய், உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். ஆனந்தகுமார் வசந்தா (வயது 38) என்பவரே  உயிரிழந்துள்ளார். வலிப்பு ஏற்பட்டமையாலேயே இவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இங்குஅழுத்தவும்...

சனி, 25 ஏப்ரல், 2015

அமரர் திரு பாலசிங்கம் திலகவதி 1ம்ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு பாலசிங்கம் திலகவதி  தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு :06.05.2014                                திதி "அட்டமி  திதி : நாள்.26..சித்திரை .2015    "அன்னாரின் நினைவஞ்சலி**  ஆத்ம சாந்திப்பிரத்தனை அழைப்பிதழ் . யாழ்.அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  திரு பாலசிங்கம் திலகவதி  அவரது...

சனி, 18 ஏப்ரல், 2015

ஆயுத முனையில் வயோதிப தம்பதிகளிடம் கொள்ளை!!!

 குப்பிளானில் வயோதிப தம்பதிகளிடம் ஆயுத முனையில் பல இலட்சம் கொள்ளை யாழ்ப்பாணம்- குப்பிளான் வடக்குக் கேணியடிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17.04.2015) வயோதிபதித் தம்பதியினரை ஆயுத முனையில் மிரட்டிப் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்பின் திருடர்கள் தப்பிச் சென்றதாக இன்று காலை வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த...

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நீரில் எண்ணெய்விடயம் பற்றிய இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே முடிவு ???

 சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ள விடயம் தொடர்பில், இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே தீர்க்கமான முடிவை எடுக்க முடியுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நீரில் எண்ணெய் மற்றும் கழிவெண்ணை கலக்கப்பட்டுள்ளமை மக்களால் அவதானிக்கப்பட்ட போதிலும், அதனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானத்திற்கு வர முடியாதென சி.வி விக்னேஸ்வரன் கூறியுள்ளார். சுன்னாகம் நீர்ப் பிரச்சினை தொடர்பில்...

திங்கள், 6 ஏப்ரல், 2015

நாய்க்கு எதிராக ஆச்சி ஒருவர் முறைப்பாடு

 யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக  75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை  விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி  பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். மேற்படி வீட்டில் 3 நாய்கள் வளர்க்கப்படுவதாகவும்,  அவற்றில்...

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

திருடன் மீது பரிதாபம் காட்டியவர் மீது தாக்குதல்!!

நீர்வேலியில்வழைக்குலை திருடிய திருடனை தோட்டக்காரர்கள் சேர்ந்து பிடித்து கட்டிவைத்திருந்த போது அவனது கட்டை அவிழ்த்து தப்ப விட்ட இன்னொரு தோட்டக்காரர் மீது தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்வேலியில் இன்று அதிகாலை வாழைக்குலைகள் இரண்டைத் திருடி  சைக்கிளில் ஏற்றி தனது தோட்டத்தினுாடாக வருவதை அவதானித்த அப் பகுதித் தோட்டக்காரர் அவனை இன்னொருவருடன் சேர்ந்து பிடித்து  மரத்தில் கட்டி கடுமையாகத் தாக்கிவிட்டு மற்றவர்களுக்கு தகவல்  சொல்வதற்காக...

நவற்கிரி காலநிலை