siruppiddy

சனி, 28 செப்டம்பர், 2013

பலர் கைது யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய

சுன்னாகம் பொலிசாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பரவலாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பலரின்மீது வழக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன. சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.துஸ்மிந்தா தலைமையில் பொலிசார் தமது பிரிவுக்கு உட்பட்ட பல இடங்களிலும் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். வீதிச்சோதனை நடவடிக்கைகளின் போது வீதி...

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலகிலேயே 2வது மிக பெரிய பயணிகள் கப்பல் !!!

  பயணிகள் கப்பல் நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக வியப்படைவீர்கள்,,,வினோதம், {காணொளி} } ...

புதன், 25 செப்டம்பர், 2013

பிறந்த நாள் வாழ்த்து:ப. செல்வகுமார்

நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்வகுமார் அவர்கள் இன்று தனது(25.09.13) இருபத்தேழாவது  பிறந்தநாளை  தனது கிராமத்து நண்பர்களுடன் இனிதே கொண்டாடுகின்றார்.இவரை குடும்ப உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இந்த உறவு இணையத்தின் ஊடாக இவரது  பிரான்ஸ் நண்பர்களான இ.மதுசன்,உ.பாலச்சந்திரன் இருவரும்   நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பெண்ணின் சடலம் குளத்தில் : அட்டனில் சம்பவம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்திலுள்ள குளத்தில் பெண் ஒருவரின் சடலத்தை அட்டன் பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். அப்பகுதி வழியாக வீதி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் குழுவே இந்த சடலத்தை கண்டுப்பிடித்துள்ளது. 55 வயது மதிக்கதக்க தனலட்சுமி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு தற்போது சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளன...

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

இராட்சத மீன்!கடற்பரப்பில் பிடிபட்ட!!!

நயினாதீவு பிரதேச கடற்பரப்பில் இராட்சத மீன் ஒன்று அப்பகுதி மீனவரின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீன் பிடிதொழிலுக்காக இன்று அதிகாலை நயினாதீவு பகுதியில் இருந்து சென்ற ஒருவரின் வலையிலேயே இவ் மீன் சிக்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.(படங்கள்) &nbs...

புதன், 18 செப்டம்பர், 2013

யாழில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு புகைப்படங்கள் இணைப்பு

  )யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.வட மாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலக்சுமி, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநநரின் நிதியொதுக்கீட்டில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகைப்படங்கள் இணைப்பு} ...

திங்கள், 16 செப்டம்பர், 2013

மின்சாரம் தாக்கி 10 வயது சிறுமி பலி

பொகவந்தலாவையில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீட்டில் தனியே இருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற மின்ன ழுத்தியை உபயோகிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளன...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

குளங்களை புனரமைத்து நெற்செய்கையினை அதிகரிக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்களை திருத்தியமைத்து அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையின் அளவை அதிகரிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்களை விரிவுபடுத்தி அதன் கொள்ளளவை அதிகரித்து விவசாயிகளுக்கு நீர்பாய்ச்சலுக்கு தேவையான அளவில் நீரை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க...

சனி, 14 செப்டம்பர், 2013

யாழ்தேவி சேவையை இன்று ஆரம்பித்தது

யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது. இன்று காலை ஓமந்தை ரயில் நிலையத்திலிந்து புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது. இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார். யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும். மேலும் 15ஆம் திகதி முதல் தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி வரை யாழ் தேவி உட்பட 3 ரயில்கள் பயணிக்கவுள்ளன. அடுத்த...

வியாழன், 12 செப்டம்பர், 2013

அதிர்ச்சி வைத்தியசாலை உணவில் செத்த பாம்பு: குட்டி

கேரளாவில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணி, உடல் நலமில்லாத தனது மகனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். அங்குள்ள உணவு விடுதியில் அவர் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த உணவு பொட்டலத்தை திறந்து பார்த்தால் அதில் ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோனார். இது தொடர்பாக அவர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் புகார் செய்தார். தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த உணவு விடுதி முன்பாக கூடி போராட்டம் நடத்தினர்....

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஐரோப்பியாவிற்குள் நுழைய முயன்ற 700 பேர்!!

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்குள் திருட்டுத்தனமாக மக்கள் குடியேறுபவர்களை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இத்தாலி கடல் வழியாக 4 படகுகள் மூலம் ஐரோப்பியவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 700 பேரை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் சிரியா, எகிப்து, எரிட்டிரியா, நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் பெரும்பாலானோர்...

சனி, 7 செப்டம்பர், 2013

யாழின் பெருமையை உலகறிய செய்வோம்

  ஆசியாவிலே பிரசித்தி பெற்ற நுாலகம்.. யாழ் நுாலகம். .நாம்முன்பு ஆண்டு அனுபவித்த இடங்களும்எம்பாரம்பாரியமறக்கஉணவுப்பொருள்கள்     இன்றைய காலைப்பொழுதினில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட படம்   பருத்தித்துறை ஆனைவிழுந்தான்  சந்தியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வைரவர் சூலம்....!!   பருத்தித்துறை தும்பளை  நெல்லண்டை பத்திரகாளி அம்மன் பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன ஆலய வருடாந்த...

வியாழன், 5 செப்டம்பர், 2013

நீங்கள் கொடுத்து வைத்தவர்களே!!!

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்.. உடுத்த உடையிருந்தால்.. தலை மேல் கூரையிருந்தால்.. உறக்கம் கொள்ள இடமிருந்தால்.. உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே! உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்.. உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்.. உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே! நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புணர்ந்தால்.. அதே நாளில் இறக்கப் போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே! நீங்கள்...

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

அசத்தல் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள்!

  எந்த துறையாக இருந்தாலும் கடின உழைப்பும், தியாகமும் தான் அதன் வெற்றிக்கு மூல காரணமாக அமையும். அந்த வகையில் உலகின் பல பாகங்களில் நடத்த சாதனை முயற்சிகளை வெளிக்காட்டும் காணொளி இது. பார்ப்பவர்களின் கண்களுக்கு வியப்பூட்டும், மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இவை. ஆண், பெண் என்ற பேறுபாடுகளின்றி சாதனையாளர்களை வெளிகாட்டுகிறது. காணொளியை பாருங்கள்... நீங்களும் சாதிக்க தொடங்குவீர்கள்... ...

நவற்கிரி காலநிலை