siruppiddy

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அதிசக்தி வாய்ந்த X கதிர் விண்வெளியில் உருவாகின்றது !

X கதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும், மருத்துவ செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றிலிருந்து வெளியாகும் சக்தியானது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பலத்த பாதுகாப்புக்களுடனேயே மருத்துவ சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள் 
மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இவற்றினை விடவும் அதிக சக்தி வாய்ந்த X கதிர்கள் அண்டவெளியில் உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நாசா விண்வெளி ஆய்வு மையம் 
உறுதிப்படுத்தியுள்ளது.
2012ம் ஆண்டு நாசா நிறுவனம் மேற்கொண்ட DXL எனும் ராக்கெட்டினை விண்ணிற்று அனுப்பும் முயற்சியின் போது பால்வெளியில் குறைந்தளவு சக்தி உடைய X கதிர்கள் உருவாக்கப்படுகின்றமை 
கண்டறியப்பட்டது.
எனினும் இவ்வகை கதிர்கள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன என்பதனை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் சய்திகள் >>>



வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14..09.16

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு திருமதி சந்திரன் (குட்டி)தம்பதிகளின் இருபத்தி ஒன்பதாவது  திருமணநாள் இன்று.14.09.16. இவர்களை அன்பு ,அம்மா அன்பு பிள்ளைகள் ,அண்ணா அண்ணி பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள்

சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து நவக்கிரி.கொம்    நவற்கிரி இணையங்களும்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும்  தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென   வாழ்த்துகின்றன,
 திருமணநாள்  வாழ்த்துக்கவிதை
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம் 
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும் 
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் 
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய 
வாழ்த்துகிறோம்!
வாழ்கவளமுடன் 
 வாழ்த்து நிகழ்வு நிழல்படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






/div>



புதன், 24 ஆகஸ்ட், 2016

சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - நூல் வெளியீடு ¨!

யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - 24 வெளியீட்டு விழா 24.08.2012.இன்று யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை 
முன்னிட்டு
 வருடந்தோறும் "நல்லைக் குமரன்" நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகர சபை ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ.வாகீசன் தலைமையில்
 இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக துனைத்தூதுவர் ஆ.நடராஐன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
மேலும் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் வீனா கான குரு பீட பீடாதிபதியுமான வாசுதேவக் குருக்கள்,சின்மயா மிசன் ஆச்சாரியர் ஜாக்ரத சைத்தன்ய சுவாமிகள், துர்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகி்யோர் ஆசியுரை வழங்கினார்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 3 ஆகஸ்ட், 2016

இலங்கையர்கள்ஐரோப்பியரை விட அதிகமாக மது அருந்துகின்றனர்

 ஐரோப்பியரை விட  அதிகமாக மது அருந்தும் இலங்கையர்கள்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார்.

இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீதமான மக்கள் மதுபானத்தை அருந்துகின்றனர்.

இலங்கையில் 37.1 வீதமான ஆண்களும் 2.4 வீதமான பெண்களும் 40 ஆயிரம் இளையோரும் மதுபானத்தை அருந்துகின்றனர்.

பெண்கள் மதுபானத்தை அருந்துவது 1.2 வீதத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது எனவும் பாலித அபேகோன் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

குழந்தை தாய்ப்பால்அருந்தும்போது மூச்சுத்திணறி மரணம்

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச்
 சென்றுள்ளார்.
எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 25 ஜூலை, 2016

இதுவரை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்!

தரம் 5 புலமைபரிசில்  பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி தரம் 5 புலமைபரிசில்  பரீட்சை நடைபெறவுள்ளன.
இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டைகள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் .
இது தொடர்பில் மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 011 2784208, 0112784537, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 1911 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும். அத்துடன், 0112784422 எனும் பெஃக்ஸ் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என பரீட்சைகள் திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை