siruppiddy

புதன், 24 ஆகஸ்ட், 2016

சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - நூல் வெளியீடு ¨!

யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - 24 வெளியீட்டு விழா 24.08.2012.இன்று யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை 
முன்னிட்டு
 வருடந்தோறும் "நல்லைக் குமரன்" நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகர சபை ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ.வாகீசன் தலைமையில்
 இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக துனைத்தூதுவர் ஆ.நடராஐன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
மேலும் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் வீனா கான குரு பீட பீடாதிபதியுமான வாசுதேவக் குருக்கள்,சின்மயா மிசன் ஆச்சாரியர் ஜாக்ரத சைத்தன்ய சுவாமிகள், துர்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகி்யோர் ஆசியுரை வழங்கினார்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 3 ஆகஸ்ட், 2016

இலங்கையர்கள்ஐரோப்பியரை விட அதிகமாக மது அருந்துகின்றனர்

 ஐரோப்பியரை விட  அதிகமாக மது அருந்தும் இலங்கையர்கள்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார்.

இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீதமான மக்கள் மதுபானத்தை அருந்துகின்றனர்.

இலங்கையில் 37.1 வீதமான ஆண்களும் 2.4 வீதமான பெண்களும் 40 ஆயிரம் இளையோரும் மதுபானத்தை அருந்துகின்றனர்.

பெண்கள் மதுபானத்தை அருந்துவது 1.2 வீதத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது எனவும் பாலித அபேகோன் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

குழந்தை தாய்ப்பால்அருந்தும்போது மூச்சுத்திணறி மரணம்

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச்
 சென்றுள்ளார்.
எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 25 ஜூலை, 2016

இதுவரை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்!

தரம் 5 புலமைபரிசில்  பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி தரம் 5 புலமைபரிசில்  பரீட்சை நடைபெறவுள்ளன.
இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டைகள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் .
இது தொடர்பில் மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 011 2784208, 0112784537, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 1911 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும். அத்துடன், 0112784422 எனும் பெஃக்ஸ் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என பரீட்சைகள் திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 7 ஜூலை, 2016

மூதூர் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை (7) காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் 03 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் மேற்படி பகுதியைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் 03 பேரைக் கொண்ட குழுவினரின் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலியான நபர், அவரது மைத்துனரைக் கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 03 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையிலேயே இவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் வாள்வெட்டில் பலியானவரின் மைத்துனர்கள் 03 பேரைக் கைதுசெய்ததாக பொலிஸார்
 கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 23 ஜூன், 2016

வர்த்தக நிலையம். தீ பற்றி எரிந்தது அக்கராயனில் சம்பவம்

கிளிநொச்சி அக்கராயன்குளம் அண்ணா சிலைச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டு வர்த்தக நிலையம் முற்றாக நாசமாகியது.. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பற்றிக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால், வர்த்தக நிலையத்தில் இருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், பெருந்தொகைப் பணமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 21 ஜூன், 2016

யாழ் கோண்டாவிலில் :தலா 2 மில்லியனில் 15 வீடுகள்!கட்டப்பட்டுள்ளது!

கோண்டாவிலில் திரு.இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம்இகுமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை துர்க்காதுரந்தரி ஆச்சிரமத்தினில் தங்கியிருந்த இளம்பெண்களிற்கு அவர்கள் தமது வாழ்வை தொடர ஏதுவாக இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இவ்வீடுகள் தலா 2மில்லியன் மதிப்பீடு கொண்டவையாகும்.நிகழ்வினில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கொடையாளரை கௌரவிக்கும் நிகழ்வை ஊர் மக்கள் 
முன்னெடுக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




நவற்கிரி காலநிலை