siruppiddy

புதன், 25 பிப்ரவரி, 2015

அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
திதி : நாள்.25 பெப்ரவரி 2015
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  நடராஜா அற்புதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.02.2015. 
ஏழு ஏழு ஜென்மங்கள் ஆனால் என்ன 
எம் உள்ளம் உங்களையே நினைத்தே நிற்கும் 
கண் முன்னே நிற்பது போல் இனிய தோற்றம் 
காணாது தவிக்கின்றோம் எங்கள் அப்பா...  
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் 
சென்றது ஏன்? கலங்குகின்றோம் 
எண்ணவில்லை நடந்தவைகள் நிஜம் தானா என்று 
நினைக்கும் முன்னே மறைந்து விட்டீர் 
தங்களைத் தான் கனவுதனில் காண நேர்ந்திடில் 
நிஜம் தானதிலே வந்தது போல் நினைவு கொள்கின்றோம் 
என்றும் மறவாத நினைவோடு நாம்..அப்பா...  
உங்கள் பிரிவால் வாடும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
மச்சான்மார்  மச்சாள் மார் ,அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமார் 
மைத்துனன்குடும்பத்தினர். .மைத்துனிகுடும்பத்தினர். சித்தப்பா சித்திமார் குடும்பத்தினர்  பெறாமக்கள் குடும்பத்தினருடன் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி  



புதன், 11 பிப்ரவரி, 2015

அறிவுறித்தல் ``பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ???

பேஸ்புக்பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.
அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார்.
எனவே, அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் குறிப்பிட்டார்.
அவ்வாறான இணைப்புக்கள் உங்களது பேஸ்புக் பக்கத்தில் காணப்படின், அதனைப் பார்வையிடாது, பேஸ்புக் நிறுவனத்திற்கு அறியத்தரும் பட்சத்தில், அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 பிப்ரவரி, 2015

ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோ தியதில் 4வர் பலி!!

இராகமை பிரதான புகையிரத பாதை, பட்டுவத்தை கடவையில் ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக
 ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து வவுனியாவை நோக்கி சென்ற ரயிலிலேயே இந்த ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 
படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நவற்கிரி காலநிலை