siruppiddy

செவ்வாய், 24 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.17

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்  
பிறந்தநாள். 24.10.17.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று 
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 10 மார்ச், 2017

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்அந்த ஐந்து என்ன தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால், அது உண்மையல்ல.
அப்படியென்றால் எது உண்மை, வாங்க தெரிஞ்சிக்கலாம்.
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறப்புகள்
5. சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தாலே போதும். அவன் அரசனகாவே இருந்தாலும், கூட அவனது வாழ்க்கையே அழிவை நோக்கி போகும் என்பது தான் உன்மையான பொருள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 



சனி, 10 டிசம்பர், 2016

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பான ஓர் முக்கிய அறிவிப்பு?

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது மற்றும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

சில சாரதி பயிற்சி நிலையங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 24 நவம்பர், 2016

பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்திலுள்ள “பிக் சிற்றி” எனும் வீட்டுத்திட்டத்திற்கு அருகிலேயே இச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு 
தப்பிச்சென்றுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 நவம்பர், 2016

எட்டு கால்கள். ஒரு தலை. இரண்டு உடல். அதி­சய ஆட்­டுக்­குட்டிபிறந்தது !

திருநெல்­வேலி:
கலி­யா­வூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்­க­ளுடன் பிறந்த அதி­சய செம்­மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமி­டங்­களில் இறந்­தது.
தூத்­துக்­குடி மாவட்டம், வல்ல­நாடு அடுத்த கலி­யா­வூரை சேர்ந்­தவர் பழனி, விவ­சாயி. இவர் செம்­மறி ஆடு­களை வளர்த்து வரு­கிறார். இதில் ஒரு செம்­மறி ஆடு குட்­டியை பிர­ச­விக்க முடி­யாமல் திண­றி­யது. இத­னை­ய­றிந்­த பழனி, செம்­மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவ­லப்­பேரி கால்­நடை மருந்­த­கத்­திற்கு சிகிச்­சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு கால்­நடை உதவி டாக்டர் முருகன், கால்­நடை ஆய்­வாளர் மணி­கண்டன், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர் முத்­து­நா­யகம் ஆகியோர் கொண்ட மருத்­துவ குழு செம்­மறி ஆட்­டிற்கு சிகிச்சை அளித்­ததால், ஒரு தலை.. இரண்டு உடல்.. எட்டு கால்­க­ளுடன் கூடி குட்­டியை  வெ­ளியே எடுத்­தனர்.  தாய் ஆடு நல­முடன் உள்ள போதிலும், அதி­சய ஆட்­டுக்­குட்டி இறந்­தது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 18 நவம்பர், 2016

இனி இலங்கையில் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 12, அல் ஹுஸைன் கல்லூரியில்,17.11.2016 நேற்றைய தினம் இடம்பெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையின் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை
 முன்னெடுத்துள்ளது.
எமது புதிய கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்கமைய, தற்போது நிலவும் கல்வித் திட்டத்திலும் பார்க்க உயர் நவீனத்துவம் கொண்ட கல்வித் திட்டமொன்று, எமது மாணவர் சமுதாயத்துக்குப் 
பெற்றுக்கொடுக்கப்படும்.
எமக்கு கிடைத்ததை விட சிறந்த எதிர்காலத்தை, எமது இளைஞர் சமுதாயத்துக்குப் பெற்றுக்கொடுப்பதே, எமது பிரதான இலக்காகும்.
தற்காலத்தில், அலைபேசிகள், ஐபாட் போன்ற தொழில்நுட்பக் கருவிகள், பயன்பாட்டில் உள்ள நிலையில், தொழில்நுட்பத்துடன் சேர்த்து, எமது பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம், புதிய வேலைத்திட்டங்களை 
ஆரம்பிக்கவுள்ளோம்.
நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட
 வேண்டும்.
நம் நாட்டுக் கல்வித் திட்ட அபிவிருத்திக்காக, பாரிய நிதியை ஒதுக்கீடு செய்வோம் என்று குறிப்பிட்ட பிரதமர்,
குறைந்த சம்பளம் வழங்கும் பொருளாதாரத்திலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அறிவு அதிகரிக்கும் அளவுக்கு, சம்பளமும் அதிகரிக்கப்படல் வேண்டும். கல்வித் துறையின் மாற்றம், அதனை இலக்காகக் கொண்டதாகவே அமைந்துள்ளது என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 நவம்பர், 2016

இராட்சத முள்ளங்கி ஒன்று புதிதாக காய்த்துள்ளது!

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.
விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை