திங்கள், 29 டிசம்பர், 2014
திங்கள், 22 டிசம்பர், 2014
திங்கள், 15 டிசம்பர், 2014
கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில் ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்று காணாமல்போனவர் இன்று காலை சடலமாக குறித்த பகுதியிலேயே மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் நேற்று முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காணாமல்போன கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனின் சடலம் காணாமல்போன பகுதியில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
எட்டு வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு
யாழ். நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவனின் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது.
நுணாவில் மத்தியை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் (வயது 8) எனும் சிறுவனே இன்று இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெற்றோர்கள் வீட்டில் சிறுவனை தனியே விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து வீடு வந்த போது சிறுவனை வீட்டில் காணவில்லை.
பல இடங்களில் நேற்று தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை இந்நிலையில் இன்று காலை கிணற்றடிக்கு பெற்றோர் சென்று இருந்த போது சிறுவன் சடலமாக கிணற்றுக்குள் மிதந்ததை பார்த்துள்ளனர்.
அதனை அடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு - ஒருவரைக் காணவில்லை
மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய ஐந்து பேரையும் பொலிசார் விசாரணை செய்துவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினரும் காணாமல் போயுள்ள இந்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>செவ்வாய், 9 டிசம்பர், 2014
பிள்ளையாருக்கு அருகில் உருவெடுக்கும் விகாரை:
இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது விகாரையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு சிறிய விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சனி, 6 டிசம்பர், 2014
அரிசி இறக்குமதி: ஒப்பந்தம் கைச்சாத்து
பங்களாதேஷிலிருந்து 25,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமொன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)