மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில் ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்று காணாமல்போனவர் இன்று காலை சடலமாக குறித்த பகுதியிலேயே மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் நேற்று முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காணாமல்போன கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனின் சடலம் காணாமல்போன பகுதியில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக