siruppiddy

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ரயில் காலியில் தடம் புரண்டது

காலி – வக்வெல்ல சந்திக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளது.இதன் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இதேவேளை, ரயில் போக்குவரத்தை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுபாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

புதன், 13 ஏப்ரல், 2016

அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் துர்முகி வருஷப் பிறப்பும் அதன் மகிமையும்

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2047, சித்திரைத் திங்கள் 1ம் நாள் புதன் கிழமை ஆங்கில மாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2016) திகதி சுக்கில பக்‌ஷத்தில் காலை 9:05 மணிக்கு (கனடா-அமெரிக்கா) வட - அமெரிக்க நாடுகளிலும் ; பிற்பகல் 3:06 மணிக்கு சுவிஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய  நாடுகளிலும்; இலங்கை, இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியநாடுகளில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13 ஆம் திகதி இரவு 6.30 மணிக்கு...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நான்கு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி !

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் சுதர்சன் எனவும், இவர் முன்பள்ளியில் கல்விகற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுவனது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

வியாழன், 7 ஏப்ரல், 2016

அனைத்து மருந்துத் தட்டுப்பாட்டுக்கு 2017 இல் முற்றுப் புள்ளி!

எதிர் வரும் 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை பிரச்சினையின்றி வழங்க புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன  குறிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு...

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

காப்பகங்களில் இலங்கையில் 435 சிறுவர் 15 ஆயிரம் சிறார்கள்

இலங்கை முழுவதும் இயங்கிவரும் சிறுவர் காப்பகங்களில் சுமார் 15 ஆயிரம் சிறுவர்கள் தங்கியிருப்பதாக ஐக்கிய இலங்கை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் நாடு முழுவதிலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிலையங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டுவரும் 435 சிறுவர் காப்பகங்களில் உள்ள சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகளும் அவர்களின் மனநலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம்  சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய...

நவற்கிரி காலநிலை