
காலி கிங்தோட்டை பகுதியில் இரு புகையிரதங்கள் ஒரே பாதையில் நேர் எதிரே பயணித்த நிலையில் ஏற்படவிருந்த அனர்த்தம் மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன் இது தொடர்பில் கண்டி - மாத்தறை புகையிரத்த்தின் சாரதி, துணைச் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி - மாத்தறை புகையிரதம், சமிக்ஞையை மீறி செயற்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து...