
தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி தரம் 5 புலமைபரிசில் பரீட்சை நடைபெறவுள்ளன.
இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார...