
யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செப்டெம்பர் 14 திகதிக்கு முன்னர் காங்கேசன்துறைக்கும் யாழ்.தேவி புகையிரதம் செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் யாழ்.தேவி கடந்த 28 வருடங்களுக்கு பிறகு கொழும்பிலிருந்து பளை...