siruppiddy

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கண்ணை மறைக்கிறதா... காவி பாசம்?!


குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. அதிரடி சாமியாரான இவர் மீது ஒரு சில வழக்குகளும் இருக்கின்றன.
இந்நிலையில், 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்' என்று, அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளம்பெண், டெல்லி போலீசில் சமீபத்தில் புகார் செய்தார்.
அந்த ஆசிரமம் இருக்கும் இடம் ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் வருவதால், அந்த மாநிலத்திலிருக்கும் ஜோத்பூர் போலீஸுக்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 30 அன்று ஆஜராகும்படி, அந்த சாமியாருக்கு ஜோத்பூர் போலீஸ் சம்மன் அளித்திருக்கிறது.
வழக்கமாக பாலியல் பலாத்கார புகார்கள் வந்தால், குறைந்தபட்சம் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வது போலவாவது பாவ்லா காட்டுவது போலீஸின் வழக்கம். பெரும்பாலும் குற்றவாளிகளிடம் இருந்து பணத்தைக் கறந்து கொண்டு தப்பிக்க வைப்பதும் நடக்கும். அதிலும் பாதிக்கப்பட்ட பெண் அப்பாவி, ஏழை என்றால், கேட்கவே வேண்டாம்.
சமயங்களில் பாலியல் பலாத்கார புகார்களையொட்டி பொதுமக்கள் கிளர்ந்து எழுந்து போராட ஆரம்பித்தால் (டெல்லி மற்றும் மும்பை சம்பவங்கள்), வீறு கொண்டு எழும்போலீஸ், குற்றம்சாட்டப்பட்டவர்களை 24 மணி நேரத்தில் பிடித்து உள்ளே போட்டு வெளுத்து வாங்க ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் ஒரு சாமியார் என்பதால், ராஜஸ்தான் மாநில போலீஸ் கிட்டத்தட்ட வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது போல சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இது பொறுக்கவில்லை... பி.ஜே.பி. கட்சியினருக்கு... 'இது ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் சதிவேலை. வேண்டுமென்றே அஸ்ரம் பாபு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. திட்டமிட்ட சதி' என்றெல்லாம் கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டனர்.
இதே பி.ஜே.பி.தான்... டெல்லி மற்றும் மும்பை கற்பழிப்பு வழக்குகளின்போது... வீதிக்கு வந்து கடுமையாக போராட்டங்களை நடத்தியது. அடிக்கடி டி.வி.யில் தோன்றி ஆவேசமாக பேட்டிகளையும் அளித்தனர் அந்தக் கட்சியினர். இப்போது ஒரு சாமியாருக்கு பிரச்னை என்றதும்... வெளிப்படையாகவே அவரை ஆதரித்து பேச ஆரம்பித்துவிட்டனர்... அந்த 16 வயது இளம்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்க்காமல்.
போலீஸ் விசாரித்து உண்மையைக் கொண்டு வருவதுதானே நம் நாட்டின் நடைமுறை. அதை எதற்காக இந்த பி.ஜே.பி. எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் கூடத்தான் பிரேமானந்தா போன்ற சாமியார்கள் மீது வழக்குப் பதிவாகின. தண்டிக்கவும் பட்டார்கள். ஏன்...? தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீது கொலை வழக்கே நடந்து கொண்டிருக்கிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிவிடக்கூடாது என்பதுதான் முக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, அவன் சாதராண மனிதன்... அவர் சாமியார் என்கிற வேறுபாடுகள் எதற்காக?
நாளைக்கு இந்த நாட்டை ஆளப்போகிறோம்... நாங்கள்தான் சுத்தம் சுயம்பிரகாச தொண்டர்கள் என்று பேசும் பி.ஜே.பி.யினர், இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கைகளுக்குத்தானே துணை நிற்க வேண்டும். சொல்லப்போனால், 'வழக்கை பதிவு செய்த ராஜஸ்தான் மாநில (காங்கிரஸ்) போலீஸ், உடனடியாக அஸ்ரம் பாபுவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்' என்றல்லவா இந்த பி.ஜே.பி. கோரிக்கை வைத்து போராடியிருக்க வேண்டும்.
பி.ஜே.பி.யினர், காவி பாசத்தோடு, அந்த அஸ்ரம் பாபுவுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு நிற்பது... அந்த 'பாரத மாதா'வுகே அடுக்காது
 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நீச்சலடித்து கொண்டிருந்த போது நடந்த விபரீதம்


கனடாவில் சிறுவர்களுடன் சேர்ந்து நீச்சலடித்து கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Don Mills Road and Lawrence Avenue East பகுதியில் உள்ள Dallimore Circle அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள நீச்சல்குளத்தில் 3 வயது சிறுவன் நீச்சலடித்து கொண்டிருந்தான்.
அப்போது மேற்பார்வையாளர்கள் கவனிக்காத நேரத்தில் குறித்த சிறுவன் நீருக்குள் மூழ்கியுள்ளான்.
இதனையடுத்து சுமார் 3 நிமிடங்கள் கழித்த சிறுவனை கண்டுபிடித்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தது பெற்றோர் உட்பட அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி திருடிய இராணுவ வீரருக்கு .,


அண்மையில் அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போனது தொடர்பாக குறித்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன், இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். வங்கிக்கு முன்னாள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இராணுவவீரர் துவிச்சக்கர வண்டி திருடியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரித்ததில் செல்வநாயகபுரம் பகுதியில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குறித்த வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
 

""ஈமயிலைக்கண்டுபிடித்தவர்எம் தமிழர்!!

அவர்வேருயாரும்இல்லை இவர்ரெதான்இந்த தமிழனுக்குஎமது அன்பந்தநல்வாழ்த்துக்கள்உரித்தகுகநன்றி,,,,,

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுவிஸ் Olten மாநகரில்எதிர்வரும் 24ம் ஐரோப்பிய நடனப் போட்டி-

 
ஐரோப்பிய இளம் நடனக் கலைஞர்களுக்கான நடைபெறும் ஐரோப்பிய நடனப் போட்டி 2013 நிகழ்ச்சி எதிர்வரும் 24ம் திகதி சுவிஸ் Olten மாநகரில் நடைபெறவுள்ளது. வெற்றிகரமாக கடந்த ஆண்டு நிறைவேறிய இவ் நிழக்வு இவ்வருடம் லங்காசிறியின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கின்றது. இதில் குறிப்பாக Solo Dance, Karaoke Music, Fashion Show, Comedy Show and லங்காசிறியின் குண்டக்க மண்டக்க நிகழ்ச்சியும் நிகழ்வை அலங்கரிக்கும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் ரிவி புகழ் பாவனா அத்தோடு நடுவராக நடிகர் பரத் மற்றும் மேலும் சிலர் பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பிற்கின்றனர். இவ் சிகழ்ச்சிகளுக்கான Ticket க்களை பெற்றுக்கொள்ள 0041 788809002 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

புதன், 21 ஆகஸ்ட், 2013

சவுதியில் தொடரும் மரண தண்டனைகள்


சவுதி அரேபியாவில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இப்ராஹிம் அல் குவன்பார் மற்றும் அஹமத் அல் முசலாம் என்ற இருவர் தொழிலாளர் முகாம் ஒன்றினைத் தாக்கியதுடன், அங்கிருந்த குடியிருப்புகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
இதில் முகமது அல் சுஜா என்ற தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
தனையடுத்து கிழக்குப் பிராந்தியத்தின் குவாடிப் மாவட்டத்தில் நேற்று இவர்கள் இருவரும் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு மட்டும் மரணதண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று ஈராக்கில் ஒரேநாளில் 2 பெண்கள் உட்பட 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பாலஸ்தீனர்! பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த,,

 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக் செய்துள்ளார்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது பேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை பேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக பேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன். அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த பக்(bug) மூலம் ஒரு பேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall) எழுத முடிகிறது. நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

நவற்கிரி காலநிலை