siruppiddy

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

கட்டுநாயக்கவில் வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயத்தை இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 45 இலட்சம் பெறுமதியான நாணயங்கள் சந்தேகநபரிடம் இருந்து சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளை இன்று காலை இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் என சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கிடையில் கை கைலப்பு: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களுக்கிடையிலான கை கைலப்பில் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை ஆசிரியர்கள் இருவர், பாடசாலை விட்டு வெளியிடத்தில் மது அருந்திய வேளை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இடம்பெற்ற கைகலப்பின்போது, ஆசிரியர் ஒருவர் மற்றைய ஆசிரியரின் தலையில் போத்தலால் அடித்துள்ளார். இதன்போதே அவர் பலத்த காயத்திற்குள்ளானதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாடசாலை சமூகம் விசனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

எதிர்வரும் வாரங்களில் யாழில் 1 காணிகள் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!

எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன.
ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித் துள்ளது.
யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளாக அவை இருந்த போதும், அவை இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த வார இறுதியில் இந்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாணிக்கசோதி விபத்தினில் மரணம்!

.    பனிக்கன்குளம் பகுதியினில் ஏ-9 வீதியினில்  இடம்பெற்ற வாகன விபத்தினில் முன்னணி கருத்தியலாளரான அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி (வயது 74) மரணமாகியுள்ளார்.அவர்  பயணித்த ஹயஸ் வான் நேற்றிரவு திங்கட்கிழமை விபத்திற்குள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவருடன் மற்றொருவரான செல்லத்துரை செல்வகுமார்(வயது 70) என்பவரும் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவிலை சேர்ந்த மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் (வயது 74), ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கத்தின் சகோதரருமாவார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இவர்களது வான், வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
1990 ம் ஆண்டினில் இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலப்பகுதியினில் வன்னி காடுகளிலினுள் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகள் தலைமைக்கும் அப்போதைய பிரேமதாசா அரசிற்குமிடையேயும் சமரசப்பேச்சுக்களை நடத்திய முகவராக மாணிக்கசோதி செயற்பட்டிருந்தார்.விடுதலைப்புலிகள் தலைமை மீது கடைசி வரை பற்றுக்கொண்டிருந்ததுடன் பகிரங்கமாகவே அவர் அதனை வெளிப்படுத்தியும் வந்திருந்தார்.
கடைசியாக நடந்த வடமாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக அவர் களமிறங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 செப்டம்பர், 2014

ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன கப்பலை கனடியர்கள் கண்டுபிடித்தனர்

160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரித்தானிய ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். ship discovery ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, கடல் அகழாய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. "இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது" என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார்.
   நோர்த் வெஸ்ட் பாஸேஜைக் கண்டுபிடிக்க சர் ஜான் ஃப்ராங்க்ளின் 129 பேருடன் இரு கப்பல்களில் புறப்பட்டார். 1845ஆம் வருடத்தில் கனடா நாட்டை ஒட்டியுள்ள ஆர்ட்டிக் பிரதேசத்தில் அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கக்கூடிய "நார்த் வெஸ்ட் பாஸேஜ்" எனப்படும் பாதையை கண்டறிவதற்காக சர் ஜான் ஃப்ராங்க்ளின் என்பவர், 129 பேருடன் இரண்டு கப்பல்களில் புறப்பட்டார்.
ஆனால், விரைவிலேயே இந்த இரண்டு கப்பல்களும் காணமல் போயின. விக்டோரியா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்கான கடல் பயணங்களிலேயே தீராத சில மர்மங்களில் ஒன்றாக இந்தக் கப்பல் விவகாரமும் நீடித்துவந்தது. 2008ஆம் ஆண்டில் ஃப்ராங்க்ளின் கப்பல்களைத் தேடும் பணியை கனடா அரசு துவங்கியது. ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருக ஆரம்பித்ததால், அந்தப் பகுதியில் கப்பல்கள் செல்வது சாத்தியமாகியிருக்கும் நிலையில், நார்த்வெஸ்ட் பாஸேஜ் மீது தனக்கு இறையாண்மை இருக்கிறது என்பதை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டது.
கிங் வில்லியம் தீவுக்கு அருகில் விக்டோரியா நீரிணையில் தேடல் குழுவினரால் எதிரொலிமானி மூலம் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் படங்கள், கடலடியில் கப்பலின் பாகங்கள் இருப்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளன.
கனடாவின் மாபெரும் மர்மம்
"ஃப்ராங்க்ளின் ஆய்வுப் பயணத்தில் சென்ற இரண்டு கப்பல்களில் ஒன்று கண்டறியப்பட்டிருப்பதன் மூலம், கனடாவின் மாபெரும் மர்மங்களில் ஒன்று தீர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஸ்டீஃபன் ஹார்ப்பர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். "ஒரு கப்பலைக் கண்டுபிடித்திருப்பது, இன்னொரு கப்பலைக் கண்டுபிடிப்பதற்கும், ஃப்ராங்க்ளின் தேடல் குழுவுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கும் தேவையான ஊக்கத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
100 வருடங்களுக்கு முன்பாக, பண்டைய எகிப்திய மன்னனான துதன்காமுனின் சமாதி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு, மிகப் பெரிய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிபிப்பு இதுதான் என பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளரான வில்லியம் பாட்டர்ஸ்பை குறிப்பிட்டுள்ளார். ship discovery ஃப்ராங்க்ளின் கடல் பயணத்தில் எச்எம்எஸ் ஈர்பஸ், எச்எம்எஸ் டெரர் என இரண்டு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஃப்ராங்க்ளினின் பயணத்தில் "எச்எம்எஸ் ஈர்பஸ்", "எச்எம்எஸ் டெரர்" என இரண்டு கப்பல்கள் ஈடுபட்டன. இந்தக் கப்பல்கள் காணாமல் போன பிறகு 1848லிருந்து 1859வரை இந்தக் கப்பல்களைத் தேடும் முயற்சி நடைபெற்றது.
அந்தக் குழுவினருக்கு என்ன ஆனது என்பது கண்டுபிடிக்கப்படாததால், பல ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்துவந்தது. கிங் வில்லியம் தீவுக்கு அருகில் இந்தக் கப்பல்கள் பனிக்கட்டிக்குள் சிக்கியிருந்திருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். அதனால், தாங்களாவது பாதுகாப்பாக தப்பிக்கலாம் என்ற நோக்கில், கப்பலில் இருந்தவர்கள் கப்பல்களைக் கைவிட்டுவிட்டு வெளியேறியிருக்கலாம்.
அப்படித் தப்பியவர்கள், மரணமடைவதற்கு முன்பாக, உணவு கிடைக்காமல் மனிதர்களையும் தின்றனர் என அப்பகுதியில் வசிக்கும் இன்னூயிட்டுகள் கூறியதாக சில தகவல்களும் உண்டு. சர் ஜான் ஃப்ராங்க்ளினின் மனைவி, தன் கணவரைத் தேடுவதற்காக ஐந்து கப்பல்களை அனுப்பிவைத்தார். அவர்கள் தப்பியிருந்தால் உணவுக்கு ஆகும் என உணவுக் கேன்களும் பனிக்கட்டிகளில் வைக்கப்பட்டன. மொத்தமாக 50 முறை இப்படித் தேடல்கள் நடத்தப்பட்டன.
கப்பல் குழுவினர் எப்படி இறந்தனர்? - இதற்கு நூறாண்டுகளுக்குப் பிறகு 1980களில் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஆய்வுசெய்தபோது, அந்த உடல்களில் அதிக அளவில் காரீயம் இருந்தது தெரியவந்தது. அவர்களது உணவு கேன்கள் சரியாக மூடப்படாததால், உணவில் காரீயம் கலந்து 129 பேரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால், சமீப கால ஆய்வுகள், ஃப்ராங்க்ளின் குழுவினருக்கு வழங்கப்பட்ட உணவுக் கேன்களில் பிரச்சனையில்லை என்றும் கப்பலின் உள் குழாய்களிலிருந்தே காரீயம் உணவில் கலந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடல் அகழாய்வில் மிக எதிர்பார்க்கப்பட்ட, முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. 2008ஆம் ஆண்டிலிருந்து கனடாவைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் இந்தக் கப்பலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பூமியை நோக்கி வேகமாக வரும் சூரியப் புயல்! பூமியைத் தாக்குமா?

வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூரியப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் (அதாவது 4.02மில்லியன் கிலோ மீட்டர் வேகம்) என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாளை இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வே. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் கூறுகிறார்.
இது பார்க்க சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது. ஆனால் பூமிக்கு வரும்போது சூரியப் புயல் என்ற அளவிலேயே வரும். சாட்டிலைட் தரவுகள் இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. அதன் மோசமான ஆற்றல் துகள் நெருப்பு மயமாக பூமிக்கு மேலேயோ, வடக்குப் பகுதியிலோ செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் காந்தப் புலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் மின் வினியோக அமைப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மின்சார அமைப்பையே சேதம் செய்து விடக்கூடியதல்ல, இதனால் சாட்டிலைட்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன்களில் சிறிய அளவு தொந்தரவு ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர்.
மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் வேகத்தில் இது வந்து கொண்டிருக்கிறது என்பதால் நாளை பூமிக்கு அருகில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை பொதுவாக மக்களுக்கு ஊறு விளைவிப்பதல்ல. ஆனால் இந்த முறை, சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் திசை நம்மை நோக்கி நேராக இருக்கிறது. இதன் அதி ஆற்றல் மிக்க மற்றும் காந்தமாக்கச் சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர்.
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

திங்கள், 8 செப்டம்பர், 2014

இரு புதிய பாடநெறிகள் ல்கலையில்

2013/2014 ஆண்டு பல்கலைக்கழக கல்வியாண்டிற்கு இரண்டு புதிய பாட நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல்துறை தொடர்பான பாடநெறியொன்றும், களனி, சப்ரகமுவ மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் தொடர்பான பாடநெறியொன்றும் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
.பொ.. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 246,665 மாணவர்களில் 143,740 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். எனினும் 2013/2014 பல்கலைக்கழக கல்வியாண்டுக்கு 24,178 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்த 55,988 பேரில் 24,178 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டிருந்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

மீண்டு தாய்மொழியை மறந்த இளைஞர் (காணொளி இணைப்பு)

 அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் ஒருவாரமாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனது தாய் மொழியை மறந்து விட்டு சீன மொழியில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மெக்மேகன் (Ben McMahon- age 22) என்ற நபர் பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மெக்மேகன் கோமாவில் இருந்து மீண்டு எழுந்த போது அருகில் இருந்த செவிலியரை பார்த்து சீன மொழியில் பேசியுள்ளார்.
பின்னர் செவிலியரிடம் ஒரு காகிதம் மற்றும் பேனா கேட்டு வாங்கி சீன மொழியில், தனது தாய் மற்றும் தந்தை மீது மிகுந்த அன்புள்ளதாகவும், தான் உடல் நலம் தேறிவிட்டதாகவும் எழுதி காட்டியுள்ளார்.
இவரின் புது மொழி திறனை கண்டு குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் வியந்துள்ளனர்.
மேலும் மெக்கேனுக்கு தனது தாய் மொழியை நினைவுபடுத்த மூன்று தினங்கள் ஆகியுள்ளது. இவர் தனது பள்ளிக்கூடத்தில் சீன மொழி படித்து வந்தாலும், அதில் சரளமாக பேசக்கூடிய திறமை இல்லாதவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இவரின் பேச்சு திறனைக்கண்டு இவருக்கு சீன தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. மேலும் இவர் சீனாவிற்கு சென்று தனது பட்டப்படிப்பை தொடர உள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

புதன், 3 செப்டம்பர், 2014

கட்டார் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 டோகாவுக்கும் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த கட்டார் எயார்வேய்ஸ் விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டமையை அடுத்தே இந்த அவரச தரையிறக்கம் நேற்று நிகழ்ந்தது.
விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஒழுக்கு ஏற்பட்டதாக விமானி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 30 நிமிடங்களில் குறித்த விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது.
எனினும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தின் இடது இறக்கையில் பிரச்சினை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அது திருத்தப்பட்ட நிலையில் விமானம் 10 மணித்தியாலம் தாமதமாக பேர்த்தை சென்றடைந்தது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தாயை விலைபேசிய வாலிபர் ஒருவர்

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
சீனாவின் குயாங்கான் (Guanghan) என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக நிபந்தனைகளுடன் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் இவர் விதித்த 4 நிபந்தனைகள்
•அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும்
•அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும்.
•போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது
•வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம் இருக்க வேண்டும்
இந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப எனக்கு தாயாக இருந்தால் அவருக்கு ரூ. 1 கோடி பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விளம்பரத்தின் அருகே பெரிய சிவப்பு விளக்கை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையெழுத்து, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

நவற்கிரி காலநிலை