siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மீண்டும்மொரு பெண் கஹவத்தையில் கொலை?


கஹவத்த கொடகெதெனிய பிரதேசத்தில் உள்ள சுது பாலத்திற்கு அருகில் தோட்டத்தில் பணிபுரியும் 48 வயதான 02 பிள்ளைகளின் 
தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இக் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய பொஸீஸ் பிரிவு அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

அனுராதபுரம் -கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிப்பாவ பகுதியில் மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு (26) 10 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

மின் சார சபைக்கு சொந்தமான மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்த நிலையில் அவரின் வீட்டுக்கு செல்ல முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான கஹட்டகஸ்திகிலிய -கிரிப்பாவ எஸ்.தௌபீக் (வயது 43) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.நீதவான் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

மரணம் தொடர்பான விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ரவுடிக் கும்பல்களை அடக்க விசேட அதிரடிப்படை நடவடிக்கை

திமன்றத்துக்கு சவால்விடும் சுன்னாகம் ரவுடிக் கும்பல்களை அடக்க உடனடியாக விசேட அதிரடிப்படையை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

ரவுடித்தனத்தில் ஈடுபடும் அனை வரையும் பொலிஸ் விசேட அதிரப்படை யைப் பாவித்து கைது செய்து நீதிமன் றில் ஆஜராக்குமாறு வட பிராந்திய சிரே ஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றங்கள் கடுமையாக உத் தரவுகள் பிறப்பிக்கின்ற நிலையில் நீதி மன்ற உத்தரவுகளுக்கு சவால்விடும் வகையில் சுன்னாகத்தில் இயங்கும் அனைத்து ரவுடிகளும் கைது செய்யப் பட வேண்டும். அவர்களுக்கு பாதுகா ப்பு அடைக்கலம் கொடுக்கும் அனைத் துப் பெற்றோர்கள், உறவினர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

குறிக்கப்பட்ட ரவுடித்தனம் பண்ணி வீதியில் வாள்வெட்டுக்களை பகிரங்க மாக நடத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இந்த ரவுடிக்கும்பல்கள் சட்ட ஆட்சிக்கு விரோதமானவர்கள், நீதிமன்ற ஆட்சிக்கு ஆபத்தானவர்கள், ஜனநாயக ஆட்சிக்கு இடையூறு விளை விப்பவர்கள், இவர்கள் அனைவரும் இருக்கவேண்டிய இடம் சிறைச்சாலை.

குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக நட மாட எந்தவொரு ரவுடிக் கும்பலையும் அனுமதிக்கக் கூடாது. ரவுடிக் கும்பலு க்கு உணவுகள், அடைக்கலம் கொடுப்ப வர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். நீதிமன்றுக்கு சவால்விடும் எந்த ரவுடி மகனும் யாழ்ப்பாணம் மாவ ட்டத்தில் இருக்க அனுமதிக்க முடியாது. நீதித்துறையுடன் மோதுகின்ற எந்த ரவு டிக் கும்பலுக்கும் மன்னிப்பு கிடையாது.

நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்குத் தலைவணங்காது சட்டத்தைக் கையி லெடுக்கும் இத்தகைய ரவுடிக் கும்பல் கள் ஒரு நிமிடம் கூட சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்கக் கூடாது.

எனவே அனைத்து ரவுடிக் கும்பல்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்கு மாறு வட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு மன்று உத்தரவு பிறப்பிக் கின்றது.

சுன்னாகம் பொலிஸ் பொறுப் பதிகாரி உட்பட குற்றவியல் வழக்குக ளில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுப வர்கள் மிகவும் பலவீனமானவர்களாக உள்ளார்கள்.

அவர்களிடம் திறமை காணப்பட வில்லை. திறமையற்ற பொலிஸ் உத்தி யோகத்தர்கள் பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதாக மன்று கருத்துகின்றது. எனவே அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடு த்து சுன்னாகம் பொலிஸ் பகுதி உடன டியாக சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திறமையற்ற உத்தியோகத்தர்களை பொலிஸ் மா அதிபரின் அனுசரணை யுடன் வேறு இடங்களுக்கு மாற்றி திறமையான பொலிஸ் அதிகாரிகளை சுன்னாகம் பொலிஸ்  நிலையத்தில் நியமிக்கும் படியும் குறிக்கப்பட்ட சிரே ஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு மன்று பணிப்புரை பிறப்பிக்கின்றது என அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




வியாழன், 17 செப்டம்பர், 2015

ஓமந்தைப் பொலிசாரால் லொறியுடன் 104 ஆடுகள் மீட்பு

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் கடமையில் நின்ற பொலிசார் யாழில் இருந்து வந்த லொறி ஒன்றினை மறித்து சோதனை செய்த போது அதில் 104 ஆடுகள் உரிய முறையில் அனுமதிகள் பெறப்படாது, முறையற்ற வகையில் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பகுதியில் விலைக்கு கொள்வனவு செய்த ஆடுகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வதாக அவ் லொறியில் பயணித்த மூவரும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உரிய அனுமதி பெறப்படாமை, முறையற்ற விதத்தில் ஆடுகளை கொண்டு சென்றமை தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் ஆடுகளும் மீட்கப்பட்டது.கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 14 செப்டம்பர், 2015

சிறுமியின் கொலை தொடர்பில் விசேட சாட்சியங்கள்?

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் கொலை தொடர்பில் பௌதீக தடயங்கள் உள்ளிட்ட விசேட சாட்சியங்களும் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொட்டதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட சிறுமியினது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொட்டதெனியாவ படல்கம அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி நேற்று முன்தினம் அதிகாலை காணாமற்போயிருந்தார்.

சிறுமியின் சடலம் வீட்டுக்கு அருகேயுள்ள ஓடையொன்றின் கரையிலிருந்து நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் மற்றும் சமூகத்தினர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சடலமாக காலை காணாமல் போன சிறுமி மீட்கப்பட்டார்

கொட்டதெனிய, படல்கமவில் காணாமல் போன சிறுமி இன்று (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இந்தச் சிறுமி மறுநாள் அதிகாலையில் காணாமல்
 போயிருந்தார்.
5 வயதான இந்தச் சிறுமியின் சடலம் திவுலப்பிட்டி அக்கரன்கஹ, ஜயசுமனாராம விகாரைக்கு அருகிலிருந்து இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 12 செப்டம்பர், 2015

உறங்கிக்கொண்டிருந்த பிள்ளை யை காணவில்லை ?

கொட்டதெனியாவ, படல்கம பகுதியில் சிறு பிள்ளையொன்று காணாமற்போயுள்ளது.

கொட்டதெனியாவ, படல்கம பகுதியைச் சேர்ந்த 4 வயதான பெண் பிள்ளையொன்றே காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த பெண்பிள்ளை தனது பெற்றோருடன் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோதே காணாமற்போயுள்ளது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவிக்கின்றார்.

சிறுமி காணாமற்போனமை தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்திற்கு இன்று (12) காலை 7 மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாகவும் பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுதவிர காணாமற்போன பிள்ளையை தேடி பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தொழிநுட்பக் கல்லூரிக் கிணற்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு.

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியின் கிணற்றிலிருந்து இன்று காலை 11.00 மணியளவில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் ரக வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று கிணற்றை இறைத்து சுத்தப்படுத்திய தொழிலாளர்களே மேற்படி குண்டை மீட்டுள்ளனர்.
இதுவரை காலமும் குறித்த கிணற்று நீரையே மாணவர்கள் குடி தண்ணீராக பருகி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 5 செப்டம்பர், 2015

கொள்ளைக் கும்பல் அட்டகாசம் உதவிக்கு ஓடியவருக்கு வாள்வெட்டு

வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35 பவுண் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் அபாயக்குரல் எழுப்பவே, அங்கிருந்த நபர் தனது சகோதரியின் வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கு நின்ற 
கொள்ளையர்கள் ஓடிச்சென்றவர் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக
 விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தொழிலுக்கு சென்று வந்த இளைஞனை, இணுவில் துரை வீதியில் இடைமறித்த இளைஞர்கள் சிலர், நேற்று வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உடுவில் கிழக்கு செட்டி வீதியினை சேர்ந்த விஜயரஞ்சன் சுரேஸ் (வயது 24) என்பவரே கழுத்தில் 
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மூதாட்டிக்கு தலையில் முளைத்த கொம்பால் அவதி????

தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது.
அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார்.
இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது.
இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு இந்த அதீத வளர்ச்சியின் காரணம் புலப்படவில்லை.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தலைமுடியை அலசும்போது எதிர்பாராத விதமாக கொம்பில் இடித்துக் கொண்டதில், அது அசுர வேகத்தில் மீண்டும் வளரத் தொடங்கியது.
வெறும் 6 மாதங்களில் அது சுமார் 5 அங்குல உயரத்துக்கும், 2 அங்குல அகலத்துக்கும் வளர்ந்துள்ளது.
இந்தக் கொம்பு நமது உடலின் நகம், முடி வளர்வதற்கான முக்கிய புரோட்டினாக விளங்கும் கேரட்டீனால் ஆனது. நம் உடலின் மீது அதிகமாக சூரிய ஒளி படும் பாகங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்படலாம்.
இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலானோருக்கு இவ்வகை புற்றுநோய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை