siruppiddy

வியாழன், 30 ஜூலை, 2015

அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விட்ட பிரிட்டன்,

ஏ.பி .ஜே.அப்துல் கலாம் மறைவுக்கு பிரிட்டன் பிரதமர், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்,
கலாம் மறைவு: அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விட்ட பிரிட்டன்,
 பூட்டான்! 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 27 ஜூலை, 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு ஞாணலிங்கம் திலீபன் [ 27.07.15 ]

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு  ஞாணலிங்கம் திலீபன் தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று 27,07,2015 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான 
இன்றும் இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அண்ணா மார்  தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் நண்பர்கள்   உறவினர்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றோம் ----
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 23 ஜூலை, 2015

‘எய்ட்ஸ்’ நோயை மருத்துவ சிகிச்சை இல்லாமல் கட்டுப்படுத்தும் அதிசய இளம்பெண்: (காணொளி )

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோயை கட்டுப்படுத்தி வருவது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) பிறக்கும்போது எய்ட்ஸ் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயிற்காக அவருக்கு 6 வயது முதல் தகுந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு பின் சிகிச்சையை தொடராத அவர் மருத்துவமனைக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்.
தற்போது, 18 வயது நிறைவடையும் நிலையில் உள்ள அந்த பெண்ணை மருத்துவர்கள் அண்மையில் பரிசோதனை செய்தபோது ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 12 வருடங்களாக எய்ட்ஸ் நோயிற்கு எந்தவித சிகிச்சையும் எடுக்காத நிலையில், அவர் தன்னுடைய நோய் மேலும் பரவாமலும், அபாயமாக மாறாமல் கட்டுக்குள் வைத்திருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதற்கு என்ன காரணம் என மருத்துவர்களுக்கு இதுவரை புரியாத புதிராக இருந்தாலும் கூட, இளம்பெண்ணின் உடலுக்குள் இயற்கையாகவே எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கிறதா என்ற சந்தேகமும் மருத்துவர்களுக்கு எழுந்துள்ளது.
பாரீஸில் உள்ள Pasteur Institute மருத்துவமனை நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் கனடாவில் உள்ள Vancouver நகரில் கடந்த திங்களன்று இந்த அதிசய நிகழ்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதுபோன்ற நோய் உடைய மிசிசிபியை சேர்ந்த பெண் ஒருவர் 
27 மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தியுள்ளார்.
ஆனால், அந்த பெண்ணை மிஞ்சும் அளவிற்கு 
தற்போது பாரிஸ் இளம்பெண்ணின் ஆரோக்கியம் உள்ளது மருத்துவ துறைக்கு சவாலாக அமைந்துள்ளதாக Asier Saez-Cirion என்ற மருத்துவர்
 கூறியுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை இல்லாமலே அந்த இளம்பெண்ணால் 
வாழ்நாள் முழுவதும் தற்போது உள்ள ஆரோக்கியத்துடன் வாழ முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்ணின் உடல் கூறுகளை பல அதிநவீன சிகிச்சைகளுக்கு
 உட்படுத்தி ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கான விடை தெரியும் என்றும் மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 ஜூலை, 2015

இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்…

சிறுநீரகம் முற்றாகப் பாதிக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடும் சிறுவனின் அவலம்.
துள்ளித்திரியும் பருவத்தில் தினமும் உயிர்வாழ பல்வேறு சத்திரசிகிச்சையினை மேற்கொண்டு அதன் வேதனையை தாங்க முடியாது துடிக்கும் பாலகன். தற்போது மருத்துவர்கள் உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டால் தான் இந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியும் எனக் கூறியுள்ளனர்.
இதற்காக இந்த சிறுவனை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் போரின் கொடூரத்தில் சிக்கி வாழவே வழியின்றி தவிக்கும் நிலையில் மருத்துவ உதவிக்கு போதுமான பணவசதியின்றி பையனினை காப்பாற்ற முடியாது தவித்து வருகின்றனர்.
உறவுகளே நீங்கள் நினைத்தால் இந்த சிறுவனை 
காப்பாற்ற முடியும். மிகுந்த ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த சிறுவனைக் காப்பாற்ற அவசர உதவி கோருகின்றோம். நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு உதவ முடியும். உதவிடுங்கள் உறவுகளே!
தொலைபேசி இலக்கம்; 0094779895328, 0094775010939
வங்கி கணக்கு இலக்கம்; கணேசன் புவனேஸ்வரி
9854786
இலங்கை வங்கி, கிளிநொச்சி
மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம் ; 00447448452286
நன்றி…
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 ஜூலை, 2015

இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்

மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞனே கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கத்திக் குத்தில் உயிரிழந்த இளைஞனும் அவரது நண்பரும் சம்மாந்துறை 12ஆம் கொலனி பிரதேசத்தில் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்,  இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் ஒளியை செலுத்திப் பார்த்தபோது, வீதியோரத்தில் இளைஞர்கள் சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் மது அருந்திய இளைஞர் குழுவுக்குமிடையில் கைகலப்பு  ஏற்பட்டுள்ளது.
இதன்போது, செல்லத்துரை தயாளன் கத்திக் குத்துக்கு உள்ளாகி, அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைக்கு பலனின்றி மரணமடைந்தார்.
இதேவேளை, இந்தக் கைகலப்பின்போது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் பாதுகாப்பில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


விமான நிலையத்தில் போலி கடவுச் சீட்டுடன் ஒருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை 
எடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்

யாழ்  மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (34 வயது) என்ற இளம்குடும்பஸ்தரைக் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கே.கே.எஸ். வீதி மல்லாகத்தில் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது,  அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதற்குப் பதிலளித்தவாறு தனது மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அவர் திரும்பி வராததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரின் தொலைபேசிக்கு அழைப்பபை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து அவரின் குடும்பத்தினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 9 ஜூலை, 2015

ஆடை மாற்றுவதை சொல்ஃபோனால் படம் பிடித்து; ஆண் நண்பருக்கு அனுப்பிய பெண்

 பெங்களூரில் இளம்பெண் ஆடை மாற்றுவதை கூட இருக்கும் நெருங்கிய தோழி பெண் படம்பிடித்து தன் ஆண் நண்பருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருக்கு பல மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் தங்குவதற்கு Paying Guest (P.G.) எனப்படும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.
இந்திராநகர் பகுதியில் உள்ள Paying Guest விடுதியில் பக்கத்து மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் பொறியாளர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நம்ரதா என்ற தனியார் நிறுவன பெண் ஊழியரும், அந்த பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கம் காட்டிய நம்ரதா, அவரை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணூம், நட்பின் அடிப்படையில் இவ்வாறு செய்வதாக நினைத்துள்ளார்.
மேலும், அந்த பெண் உடை மாற்றும்போது, குளிக்கும் போதெல்லாம், விளையாட்டாக செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில், தனது அரைகுறை படங்கள் வெளியிடப்பட்ட விடயம் அந்த பெண்ணுக்கு 
தெரியவந்துள்ளது. அந்த படங்கள் அனைத்தும், நம்ரதா எடுத்தவை என்று தெரியவந்ததால், உடனடியாக இந்திராநகர் பொலிசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நம்ரதா மீது இந்திய தண்டனை சட்டம் 354, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்றவற்றின்கீழ், பெண்ணின் மாண்பை குலைத்ததற்காக வழக்குப்பதிவு செய்தனர்.மேலும்,போலீஸார்
 நம்ரதாவிடம் நடத்திய விசாரணையில், விவாகரத்தான நம்ரதா, ஜெயதேவ் என்ற வேறு ஆண் நண்பருக்கு அந்த பெண்ணின் அரைகுறை படங்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

நவற்கிரி காலநிலை