siruppiddy

சனி, 29 நவம்பர், 2014

காணாமல் போன மீனவர்கள் கரைசேர்ந்தனர்

பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை  காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர்.
படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர்.
இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள்  வெள்ளிக்கிழமை  அதிகாலை மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக மீனவர்களின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, சக்கோட்டை மீனவ சங்கத்தின் இரண்டு மீனவ படகுகள் தேடுதல் நடத்தியும் காணாமற்போனவர்களை மீட்க முடியவில்லை.
கடற்கொந்தளிப்பால் தேடுதலுக்கு சென்ற மீனவ படகுகளும் மீண்டும் கரைக்கு திரும்பின. இந்நிலையில் இம் மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.
மேற்படி 3 மீனவர்களும் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது தற்காலிகமாக சக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாத்தறை ‘றொட்டஹொட’ பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பகுதியில் சனிக்கிழமை (29) அதிகாலை 4 மணிக்கு கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, சனிக்கிழமை (29) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவர்கள் கடந்த 18ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற டேவிட்சில்வா பிரசாந்த (வயது45), சுமிபால கசித் மதுசாந்த  (வயது25), விஜி தனிஸ்ரர் (வயது41), அரியதாஸ் பிரதீப் குமார் (வயது26),  சமதாஸ ஜெனக (வயது 35) ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளமையால் இந்த மீனவர்களுடன் 1 றோலர் படகு சேதமடைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
மீனவர்களையும் படகினையும் வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர் சங்கத்தினர் மீட்டதுடன் அவர்களுக்கான உணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இம் மீனவர்கள் தொடர்பாக மாத்தறை மீனவர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 நவம்பர், 2014

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய ???

பீகாரில் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து போலீஸ் நிலையத்தில்  பாப்லி தேவி புகார் மனு கொடுத்துள்ளார்.

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள பிக்ரம் கிராமத்தில் ராகேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன் பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார் திருமணம் செய்யும் முன் வீட்டில் கழிப்பறை கட்டிகொடுப்பேன் என்று கூறி பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார்.இவர் கார்பெண்டராக வேலை பார்த்துவருகிறார்.

இது குறித்து பாப்லி தேவி கூறியதாவது;

என் கணவரை கழிப்பறையை கட்டிகொடுக்க சொல்லி கேட்டபோது அவர் தட்டி கழித்து வந்தார்.மேலும் இது பற்றி கேட்டபோது அவர் என்னை தாக்கி உள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறுவது மரியாதை ஆகும்.

வீட்டில் கழிப்பறை என்பது சுகாதரம் மற்றும் கவுரம் ஆகும் என்று குறிப்பிட்டார்.எனக்கு என் பெற்றோர் ஆதரவு உள்ளது. கணவர் வீட்டில் கழிப்பறை கட்டும் வரை நான் அவர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார்.

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாதது அவமானமாக கருதுகிறேன். கழிப்பறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியது. என்னுடைய மைத்துனி மற்றும் மாமியார் காலை கடனை கழிப்பதற்காக இருட்டில் திறந்தவெளியில் செல்லவது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 16 நவம்பர், 2014

நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிகள், நல்லூர் பிரதேச சபையினருடன் யாழ். பொலிஸாரும் இணைந்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே 124 கிராமசேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சனிக்கிழமை (15) மேற்கொண்டிருந்தனர். இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், டெங்கு பரவக்கூடிய சூழலினை வைத்திருந்த பலர் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், தீவிரமாக டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில், சுற்றாடலை வைத்திருந்த மேற்படி 10 பேருக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். தற்போது மழை காலமாகையால் டெங்கு பரவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதனை தடுக்கும் வகையில் வீட்டு, கட்டிட உரிமையாளர்கள் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சிரட்டை, இளநீர், பொலித்தீன் பைகளை அகற்றி ஒத்துழைக்குமாறு பொலிஸார் யாழ்ப்பாண பொதுமக்களை கேட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 14 நவம்பர், 2014

நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 குழந்தைகளின் சிரிப்பில் தெய்வத்தை காணலாம் என்பார்கள், உண்மையில் குழந்தைகள் தான் தெய்வங்கள்.
கள்ளம் கபடம் அறியாத குழந்தைகளை மகிழ்விப்பதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நேரு அவர்கள், வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 
இந்நாளில், அழகுக்குழந்தைகள் தங்களை இன்னும் அழகுபடுத்தி பள்ளிக்கு செல்வார்கள்.
தாங்கள் விரும்பும் தலைவர்கள் போல் மாறுவேடமிட்டு, பள்ளியில் நடித்துக்காட்டி பரிசையும் வெல்வார்கள்.
அன்று, இவர்களின் கொண்டாட்டத்தால் பள்ளி முழுவதும் சிரிப்பு மழை சூழும், பள்ளி மட்டுமல்லாமல் வீடுகளிலும் ஒரே கொண்டாட்ட கலவரம் தான்.
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து, பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இவர்களின் வயதில் கவலைகள் என்ற ஒன்றிற்கு இடம் இருக்காது.
வீட்டின் தாய் தந்தையரின் அரவணைப்பு, பள்ளியில் ஆசிரியர்களின் அறிவுரை, தோழ் கொடுக்கும் தோழன் என அனைவராலும் சூழப்பட்ட வாழ்க்கை வாழ்வது குழந்தைப் பருவத்திலும், மாணவப் பருவத்திலும் தான்.
இப்படி தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளும் இவர்கள், அடுத்தகட்டமாக சாதனை என்ற ஒன்றை நோக்கி பயணிக்கிறார்கள்.
ஏனெனில் சுறுசுறுப்பு, சாதிக்க துடிக்கும் எண்ணம் போன்றவை இந்த வயதில் தான் தோன்றும்.
சாதனை, அரவணைப்பு என ஒருபுறம் பாதையில் குழந்தைகள் பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் குழந்தை தொழிலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குழந்தைகள் தினமான இன்று, குழந்தை தொழிலாளர்களையும் நினைவுகூறத்தான் வேண்டும்.
ஏனெனில், குழந்தைகள் தினத்தில் அழகாக அலங்கரிக்க குழந்தைகள் ஒருபுறம், அலங்கோலமாக காட்சியளிக்கும் குழந்தைகள் என பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
விளையும் பயிர்களை விதையிலேயே வீணாக்காதீர்கள் என்பதற்கேற்ப, குழந்தைகள் தினமான இன்று, அறிவுரை, நல்லொழுக்கம் எனும் உரங்களை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வளர்ப்போமாக.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சிறுநீரை மாற்றி கொடுத்து மாட்டிய பஸ் டிரைவர்!

  எகிப்து நாட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தபடி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். அதில் ஒருவர் மட்டும் தனது போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். அந்த பஸ் டிரைவரின் மனைவி 2 மாத கர்ப்பமாக உள்ளதால்,
 அந்த சிறுநீர் பரிசோதனையில் பஸ் டிரைவர் கர்ப்பம் என தெரிய வந்தது. விசாரணையில் சிறுநீர் உங்களுடையது தானா என அதிகாரிகள் கேட்க, பிரச்சினையில் இருந்து தப்பிக்க அந்த டிரைவர் ஆமாம் என்று கூறியுள்ளார். அதிகாரி சிரிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் கை குலுக்கி ‘நீங்கள் கர்ப்பம் அடைந்து உள்ளீர்கள், எனது வாழ்த்துக்கள்’ என கூறி சென்றுவிட்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 2 நவம்பர், 2014

ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பாடசாலையின் மாணவன்!

  யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு
உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது
மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். இதே வேளை
  யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை