siruppiddy

வியாழன், 23 ஜூன், 2016

வர்த்தக நிலையம். தீ பற்றி எரிந்தது அக்கராயனில் சம்பவம்

கிளிநொச்சி அக்கராயன்குளம் அண்ணா சிலைச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டு வர்த்தக நிலையம் முற்றாக நாசமாகியது.. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பற்றிக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால், வர்த்தக நிலையத்தில் இருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், பெருந்தொகைப் பணமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 21 ஜூன், 2016

யாழ் கோண்டாவிலில் :தலா 2 மில்லியனில் 15 வீடுகள்!கட்டப்பட்டுள்ளது!

கோண்டாவிலில் திரு.இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம்இகுமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை துர்க்காதுரந்தரி ஆச்சிரமத்தினில் தங்கியிருந்த இளம்பெண்களிற்கு அவர்கள் தமது வாழ்வை தொடர ஏதுவாக இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இவ்வீடுகள் தலா 2மில்லியன் மதிப்பீடு கொண்டவையாகும்.நிகழ்வினில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கொடையாளரை கௌரவிக்கும் நிகழ்வை ஊர் மக்கள் 
முன்னெடுக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 13 ஜூன், 2016

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி ( 13.06.16 )

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடாவை  வதிவிடமாகவு​ம் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) தனது  பிறந்தநாளை இன்று .13.06..2016. கொண்டாடுகி​றார். இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்  
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சகலவளம்மும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றது 
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

வெள்ளி, 10 ஜூன், 2016

இடம்பெற்ற மோதல் தாக்குதலலில் இருவர் கைது!

யாழ் பாசையூர் பகுதியில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் கடற்கரை வீதிக்கு அருகாமையில் வைத்து இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆம் திகதி சாப்பாட்டு கடை ஒன்றில் இரண்டு தரப்பினருக்கிடையில் முறுகல் நிலை தோன்றி, அச்சண்டை நாள் முழுவதும் தொடர்ந்தது இந்நிலையில், அன்றைய தினம் 3.30 மணியளவில் பாசையூர் அந்தோனியார் வாசிகசாலையில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நால்வர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அந்தோனிப்பிள்ளை மணி (வயது 70), ஞானசீலன் மதியழகன் (வயது 42), ஞானசீலன் எழில்வதனன் (வயது 40), தேவதாஸ் ஜோன் பிறேமதாஸ் (வயது 37) ஆகியோர் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் 13 பேர் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும், தாக்குதல் மேற்கொண்ட அனைவரும் பணத்துக்காக அடிதடியில் ஈடுபடும் குண்டர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பலர், ஊரை விட்டு தப்பி சென்றுள்ள நிலையில் அன்டையா மற்றும் விஸ்வா என்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடமிருந்து கத்திகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


புதன், 8 ஜூன், 2016

பிறந்த சிவந்த மண்ணை நினைக்கின்றேன்

நான் படுக்கையிலே கிடந்து கூடப்பாச மண்ணைத் தேடுகின்றேன்
துள்ளி விளையாடிய என் சொந்த மண்ணைத் துதிக்கின்றேன்
வெண்ணிலவு விளக்கேற்றும் என்வீர மண்ணை 
மதிக்கின்றேன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 6 ஜூன், 2016

இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகும் : மனோ உறுதி!

யுத்தத்தால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும், இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என அமைச்சர் மனோ கணேசன் 
தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், விரைவில் அவை நிறைவுபெற்று மீள்குடியேற்றம் பூர்த்தியாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பான விபரங்கள், கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ள நிலையில், அன்றைய தினம் மேலும் காணிகள் விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை