siruppiddy

சனி, 30 மே, 2015

காணாமற்போன சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள், கிணற்றைப்பார்த்த போது சடலத்தை கண்டுள்ளனர். கிராம அலுவலர் பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் அரபு நாட்டில் வேலை செய்கிறார். வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு திருவிழாவுக்கு தந்தை சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சிவபாலசுப்பிரமணியம் சிறுமியின் சடலத்தை பார்வையிட்டபின் சடலத்தை உடல் கூற்றுப்பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். சிறுமியின் சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 25 மே, 2015

மனைவிகளை சமாளிக்க முடியாமல் தற்கொலை!

 இரு பெண்­களைத் திரு­மணம் செய்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவிமாரையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குடும்­பத்­த­க­ராறு அதி­க­ரித்­த­மை­யினால் வாழ்வில் விரக்தி­யுற்று தனது உடலில்
 மண்­ணெண்­ணையை ஊற்றி தனக்கு தானே தீ மூட்டி மர­ணத்தை தழு­வியுள்ளார். இந்த பரபரப்பு சம்­பவம் கிளி­நொச்சி மலை­யா­ள­புரம் தெற்கில் இடம்­பெற்­றுள்­ளது.
இவ்­வாறு மர­ண­மா­னவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார். இவ­ரது மரண விசா­ர­ணையை கிளி­நொச்சி மாவட்ட மர­ண­வி­சா­ரணை அதி­காரி மேற்­கொண்டார். கிளி­நொச்­சியில் முதல் மனை­வியும் மூன்று பிள்­ளை­களும் இருக்க யாழ். கோண்­டாவில் இன்­னு­மொரு
 பெண்ணை திரு­மணம் செய்­தி­ருந்தார் எனவும் இதனால் இரு குடும்­பங்­க­ளி­டை­யேயும் பிரச்­சினை அதி­க­ரிக்க ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற இவர் பாழ­டைந்த கட்­டடம் ஒன்­றிற்குச் சென்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 19 மே, 2015

உலகில் முதல்அதிசய முறையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

கனடாவில் நற்ராசா றஜனி என்ற பெண் தனது கரு முட்டைகளை மறு நிரப்பல் செய்து அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்த சிகிச்சை மூலம் குழந்தை பெறும் உலகின் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஏப்ரல் 13ம் திகதி பிறந்த ஷாயின் என பெயரிடப்பட்ட இந்த குழந்தை மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது. இது ஒரு சிக்கலான கருவுறுதல் சிகிச்சை முறையாகும்.
குறைபாடான முட்டைகளை, பெண்ணின் சொந்த கருப்பையில் இருந்து எடுத்து புதிதாக உற்பத்தி செய்யும் உயிரணுக்களை பாவித்து மீள நிரப்பல் செய்யும் முறையாகும்.
இந்த செயல் முறை Toronto Centre for Advanced Reproductive Technology (TCART), மருத்துவ இயக்குநர் னுச. சுழடிநசவ ஊயளிநச அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த முறையில் மேலும் எட்டு பிரசவங்கள் தொடர்ந்து இடம்பெற இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 14 மே, 2015

வாகனம் குடைசாய்ந்தது: நான்கு படைவீரர்கள் படுகாயம்

யாழ் ,புத்தூர், மீசாலை பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த இராணுவ கெப் ரக வாகனம், இன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வண்ணாத்தி பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது.
சாவகச்சேரியில் இருந்து பலாலி நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ வாகனமே இவ்வாறு குடைசாய்ந்து
 விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணம் செய்த நான்கு இராணுவ வீரர்கள், படுகாயங்களுக்கு உள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 12 மே, 2015

ஆலய வளாகத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை  இரவு மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் தங்கியிருந்து தொண்டுகள் செய்து வந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

புதன், 6 மே, 2015

மாணவி சுலக்ஷினி தேசிய மட்டத்தில் முதலிடம்

மட்டக்களப்பை சேர்ந்த செல்வி புவனேந்திரராஜா சுலக்சனி தேசிய இலக்கிய விழாவில் முதல்ப்பரிசை பெற்று சாதித்துள்ளார். ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் தரம் – 09 இல் பயிலும் இந்த மாணவி, தேசிய இலக்கிய விழாவின் கனிஸ்ட பிரிவிற்கான கவிதைப் போட்டியிலேயே முதல்ப்பரிசை பெற்றுள்ளார்.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் – 2015 தழிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களைக் கொண்டு பாடி வெளியிடப்பட்ட ‘அருணோதய – 2015 சிறுவர் பாடல்கள்’ இறுவட்டிலும் பாடல்களை தனியாகவும் குழுவாகவும் தமிழ் சிங்கள மாணவர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 4 மே, 2015

நாடு திரும்பிய நபர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமையினாலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை ஹமன்கொடை எனும் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது இந்திக்க சதுரங்க என்பவர் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான இவர், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார்.
இவர் இல்லாமல் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதும் இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர் கடந்த 2ம் திகதி நாடு திரும்பி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை