siruppiddy

செவ்வாய், 22 நவம்பர், 2016

எட்டு கால்கள். ஒரு தலை. இரண்டு உடல். அதி­சய ஆட்­டுக்­குட்டிபிறந்தது !

திருநெல்­வேலி:
கலி­யா­வூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்­க­ளுடன் பிறந்த அதி­சய செம்­மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமி­டங்­களில் இறந்­தது.
தூத்­துக்­குடி மாவட்டம், வல்ல­நாடு அடுத்த கலி­யா­வூரை சேர்ந்­தவர் பழனி, விவ­சாயி. இவர் செம்­மறி ஆடு­களை வளர்த்து வரு­கிறார். இதில் ஒரு செம்­மறி ஆடு குட்­டியை பிர­ச­விக்க முடி­யாமல் திண­றி­யது. இத­னை­ய­றிந்­த பழனி, செம்­மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவ­லப்­பேரி கால்­நடை மருந்­த­கத்­திற்கு சிகிச்­சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு கால்­நடை உதவி டாக்டர் முருகன், கால்­நடை ஆய்­வாளர் மணி­கண்டன், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர் முத்­து­நா­யகம் ஆகியோர் கொண்ட மருத்­துவ குழு செம்­மறி ஆட்­டிற்கு சிகிச்சை அளித்­ததால், ஒரு தலை.. இரண்டு உடல்.. எட்டு கால்­க­ளுடன் கூடி குட்­டியை  வெ­ளியே எடுத்­தனர்.  தாய் ஆடு நல­முடன் உள்ள போதிலும், அதி­சய ஆட்­டுக்­குட்டி இறந்­தது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை